யு-19 உ.கோப்பை: வ.தேசத்தின் ஆக்ரோஷப் பந்துவீச்சு; 21 ரன்களுக்கு 7 விக். இழந்து இந்திய அணி 177  ஆல் அவுட்

யு-19 உ.கோப்பை: வ.தேசத்தின் ஆக்ரோஷப் பந்துவீச்சு; 21 ரன்களுக்கு 7 விக். இழந்து இந்திய அணி 177  ஆல் அவுட்
Updated on
1 min read

யு-19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச கேப்டன் அக்பர் அலியினால் கார்க் தலைமை இந்திய யு-19 அணி முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டது, இந்திய இளையோர் அணி கடைசி 7 விக்கெட்டுகளை 21 ரன்களுக்கு இழந்து 177 ரன்களுக்குச் சுருண்டது.

போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 178 ரன்களாக இருக்கிறது, இந்திய அணியில் ஏழ்மையின் நிலையிலிருந்து பானிபூரி வெற்று பிளாஸ்டிக் டெண்ட் கொட்டகையில் தங்கி கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் அதிகபட்சமாக 121 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 88 ரன்கள் எடுத்து உறுதியாக நின்றார்.

ஆனால் உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் 156/3 என்று இந்திய அணி 39.4 ஓவர்களில் இருந்த போது யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 88 ரன்களில் ஆக்ரோஷமாக வீசிய வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் பந்தை புல்ஷாட் மிஸ் ஆக ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறியது பெரிய சரிவின் தொடக்கமாக அமைந்தது.

அதற்கு அடுத்த பந்தே சித்தேஷ் வீர் டக் அவுட் ஆகி வெளியேற, அதன் பிறகு வந்த அங்கலேக்கர், பிஷ்னாய், கார்த்திக் தியாகி, சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி 7.4 ஓவர்களில் 21 ரன்களுக்கு ஜெய்ஸ்வால் விக்கெட்டுடன் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 177 ரன்களுக்குச் சுருண்டது.

முன்னதாக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தவிர, திலக் வர்மா 38 ரன்களையும், ஜூரல் 22 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

வங்கதேசம் தரப்பில் தொடக்க வீச்சாளர் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த இலக்கை வெற்றிகரமாகத் தடுக்க இந்திய அணி போராட வேண்டி வரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in