15 வயதில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அரைசதம்: நேபாள் வீரர் சாதனை

15 வயதில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அரைசதம்: நேபாள் வீரர் சாதனை
Updated on
1 min read

நேபாள் கிரிக்கெட் அணியின் கவுஷல் மல்லா ஒருநாள் கிரிக்கெட்டில் அரைசதம் கண்டதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் சர்வதேச ஒருநாள் அரைசதம் கண்ட வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஏற்கெனவே நேஆள் வீரர் ரோஹித் குமார் பாவ்டெல் என்பவர் கடந்த ஆண்டு யுஏஇ அணிக்கு எதிராக 55 ரன்கள் அடித்த போது இவருக்கு வயது 16 ஆண்டுகள் 146 நாட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரே சச்சின் சாதனையைக் கடந்து செல்ல, தற்போது 2வது முறையாக இளம் வயதில் சர்வதேச அரைசதம் கண்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கவுஷல் மல்லா.

சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுகத் தொடரான பாகிஸ்தானுக்கு எதிரான பைசலாபாத் டெஸ்ட் போட்டியில் அரைசதம் எடுக்கும் போது வயது 16 ஆண்டுகள் 214 நாட்களே என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நேபாள் கிரிக்கெட் வீரர் கவுஷல் மல்லா 15 வயதில் ஒருநாள் சர்வதேச அரைசதம் கண்டு புதிய சாதனை நாயகனாகியுள்ளார்.

இடது கை வீரரான கவுஷல் மல்லா தனது அறிமுக உலகக்கோப்பை லீக் -2 மேட்சில் யு.எஸ் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இவருக்கு வயது 15 ஆண்டுகள் 340 நாட்கள்.

நேபாள் அணிக்காக 3 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கவுஷல் மல்லா, தன் அணி 49/5 என்று தடுமாறிய வேளையில் களமிறங்கினார், இவரது அரைசதத்தினால் நேபாள் அணி 190 ரன்களை எட்டியதோடு யு.எஸ். அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேபாள் அணி 2018 உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றின் போது ஒருநாள் சர்வதேச அந்தஸ்து பெற்றது. வாரியத்தில் அரசியல் தலையீடு அதிகம் இருப்பதன் காரணமாக நேபாள் கிரிக்கெட் சங்கத்துக்கு ஐசிசி தடை விதித்த போதிலும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.

பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் ஐசிசி தடையை விலக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in