உடற்தகுதியைக் காரணம் காட்டி அதிரடி வீரர்கள் எவின் லூயிஸ், ஹெட்மையர் மே.இ.தீவுகள் அணியிலிருந்து நீக்கம்

உடற்தகுதியைக் காரணம் காட்டி அதிரடி வீரர்கள் எவின் லூயிஸ், ஹெட்மையர் மே.இ.தீவுகள் அணியிலிருந்து நீக்கம்
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான மே.இ.தீவுகள் அணியில் அதிரடி தொடக்க வீரர் எவின் லூயிஸ், மிடில் ஆர்டர் காட்டடி மன்னன் ஷிம்ரன் ஹெட்மையர் ஆகியோர் இடம்பெறவில்லை.

அயர்லாந்துக்கு எதிராக சமீபத்தில் 99 மற்றும் சதமெடுத்தவர் எவின் லூயிஸ். ஹெட்மையர் அயர்லாந்துக்கு எதிராக முதல் 2 போட்டிகளில் சொதப்பியதால் 3வது போட்டியிலிருந்து நீக்கப்பட்டார், இந்நிலையில் இவரும் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

‘சமீபத்திய உடற்தகுதி சோதனைகளில் குறைந்தபட்ச உடற்தகுதி சோதனைகளில் கூட இருவரும் வெற்றி பெறவில்லை’ என்று மே.இ.தீவுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் பதிலாக டேரன் பிராவோ, ரோவ்மேன் பொவெல் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உடற்தகுதி சோதனையையெல்லாம் மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய அணிகள் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் உள்ள அணிகளாகவே இருக்க முடியும், மே.இ.தீவுகள் அணி மறுக்கட்டுமானக் காலக்கட்டத்தில் இருக்கிறது, இந்நிலையில் பெரிய ஃபிட்னெஸ் என்றெல்லாம் கூறி இரண்டு அதிரடி வீரர்களை அணியிலிருந்து நீக்கியிருப்பது அந்த அணிக்கு மேலும் பலவீனத்தையே அதிகரிக்கும் என்பதே மே.இ.தீவுகள் வாரிய வட்டாரங்களின் கவலையாக இருந்து வருகிறது.

மே.இ.தீவுகள் அணி வருமாறு:

பொலார்ட் (கேப்டன்), ஷேய் ஹோப், ஃபேபியன் ஆலன், சுனில் அம்ப்ரிஸ், டேரன் பிராவோ, ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், கீமோ பால், நிகோலஸ் பூரன், போவெல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வால்ஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in