ரோஹித் சர்மாவுக்குப் பதில் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் பிரித்வி ஷா

ரோஹித் சர்மாவுக்குப் பதில் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் பிரித்வி ஷா
Updated on
1 min read

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை (புதன், 5-2-20) அன்று தொடங்குகிறது, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்த பிறகு டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன.

இந்நிலையில் கெண்டை சதைப்பிடிப்பு காரணமாக நியூஸிலாந்தில் நடைபெறும் ஒருநாள், டெஸ்ட் தொடரிலிருந்து விலக்கப்பட்ட ரோஹித் சர்மாவுக்குப் பதில் டெஸ்ட் போட்டிகளுக்காக மீண்டும் பிரித்வி ஷா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட 16 வீரர்கள் கொண்ட அணியில் இஷாந்த் சர்மா இடம்பெற்றுள்ளார். நவ்தீப் சைனி, மற்றும் இந்தியா ஏ வுக்காக பிரமாதமான இரட்டைச் சதம் அடித்து ட்ரா செய்த ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுக்குப் பதில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:

விராட் கோலி, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷுப்மன் கில், விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா (உடற்தகுதி பெற்றால்), உமேஷ் யாதவ், மொகமட் ஷமி, நவ்தீப் சைனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in