

46-வது தேசிய ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டையில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் தமிழக ஆடவர் அணி, உத்தரபிரதேசத்தை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 2-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
அதேவேளையில் மகளிர் பிரிவில் தமிழக அணி 3-1 என்ற செட் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றது. பதக்கம் வென்ற இரு அணிகளுக்கும் நேற்று சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் தமிழக வாலிபால் சங்க தலைவர் ஏ.கே.சித்திரை பாண்டியன், பொதுச் செயலாளார் ஏ.ஜே.மார்டின் சுதாகர், துணைத் தலைவர் கே.குண சீலன், இணைச் செயலாளர் ஏ.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.