Published : 30 Jan 2020 12:47 PM
Last Updated : 30 Jan 2020 12:47 PM

என் சிக்சர்கள் அல்ல, மொகமட் ஷமியின் கடைசி ஓவர்தான் வெற்றிக்குக் காரணம்: ரோஹித் சர்மா தன்னடக்கம்

டி20 உலகக்கோப்பை வருவதையடுத்து அதற்கு முன்னர் வெற்றிகளைக் குவித்து தன்னம்பிக்கை பெறுவது அவசியமாகிறது என்று ஹிட்மேன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஷமி கடைசி ஓவரில் வில்லியம்சன், மற்றும் ராஸ் டெய்லரை வீழ்த்தி டாட் பால்களுடன் அபாரமாக வீச 179 ரன்கள் என்ற எண்ணிக்கையை இரு அணிகளும் சமன் செய்ய ஆட்டம் சூப்பர் ஓவருகுச் சென்றது, கேன் வில்லியம்சனின் 48 பந்து 95 ரன்களும் கூட நியூஸிலாந்தை கரைசேர்க்கவில்லை.

சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மாவின் 2 சிக்சர்கள் இந்திய அணியின் தொடர் வெற்றியை உறுதி செய்தது.

இந்நிலையில் ரோஹித் சர்மா கூறியதாவது:

யாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் அவர்கள் அதை நன்றாகப் பயன்படுத்துகின்றனர்., கடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகர் தவண், தற்போது ராகுல். கடந்த 7-8 டி20-யில் ராகுல் 4-5 அரைசதங்களை அடித்துள்ளார். எனவே இது நல்ல அறிகுறி.

வெற்றியில் மொகமட் ஷமியின் கடைசி ஓவர்தான் முக்கியமானது, நான் அடித்த 2 சிக்சர்கள் அல்ல, ஷமியின் கடைசி ஓவரதான் வெற்றிக்கு வழிவகுத்தது. ஷமியின் கடைசி ஓவரில் 9 ரன்களை அடிக்க விடாமல் தடுத்தோம். பனிப்பொழிவில் இப்படி வீசுவது சாதாரணமல்ல.

இப்படிப்பட்ட போட்டிகள் உலக டி20யிலும் நடக்கும், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதால் ஷமியின் கடைசி ஓவர் மிக முக்கியமானதாக அமைகிறது. நாம் கடைசி ஓவரில் 5 ரன்களைத் தடுத்தாக வேண்டும் என்பதைக் கூட பாசிட்டிவ் ஆகவே அணுக வேண்டும். அதைத்தான் இந்தப் போட்டியில் ஷமி காட்டினார், என்றார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x