Published : 29 Jan 2020 07:40 PM
Last Updated : 29 Jan 2020 07:40 PM

சூப்பர் ஓவர்கள் எங்களுக்கு நன்றாக அமைவதில்லை: கேன் வில்லியம்சன் பேட்டி

உலகக்கோப்பை 2019-ன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தும் வாய்ப்பை சூப்பர் ஓவரில் கோட்டை விட்ட பிறகு நியூஸிலாந்துக்கு அணியினருக்கு இன்னொரு மனமுடையும் சூப்பர் ஓவர் தோல்விப் போட்டியாக ஹேமில்டன் டி20 போட்டி அமைந்தது.

தொடரை இழந்த நிலையில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:

சூப்பர் ஓவர்கள் எங்களுக்கு நன்றாக அமைவதில்லை, எனவே ரெகுலர் ஆட்டத்தில் இன்னும் சிறப்பாகச் செயல் படவேண்டும் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் நன்றாக ஆடினோம்.

இந்திய அணியின் நல்ல தொடக்கத்துக்குப் பிறகு பந்து வீச்சின் மூலம் கட்டுப்படுத்தினோம். இந்த மாதிரியான முயற்சிக்குப் பிறகு தோல்வியடைவது ஏமாற்றமளிக்கிறது. ஆனால் இது சிறிய இடைவெளியின் தோல்விதான்.

அந்த 3 பந்துகளிலும் இந்தியா தங்கள் அனுபவத்தினால் பெரிய கணங்களில் எழுந்து நின்றது. நாங்கள் இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

களத்தில் நின்றது, பார்ட்னர்ஷிப்களை கட்டமைத்தது ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றது மனதுக்கு திருப்தி அளிக்கிறது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x