Published : 27 Jan 2020 08:33 PM
Last Updated : 27 Jan 2020 08:33 PM

ஒவ்வொரு பவுலருக்கும் ஒரு பேட்ஸ்மென் கோச்: ஜான் ரைட்டின் நூதன முறையை வியக்கும் விவிஎஸ். லஷ்மண்

இந்திய அணியில் ஒரு காலத்தில் பவுலர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு செய்வது மிகவும் அரிதே. கபில்தேவ் கேப்டனான பிறகு மதன்லால், சாந்து, ரோஜர் பின்னி போன்றவர்களும் பேட்டிங்கில் கொஞ்சம் பங்களிப்பு செய்தனர்.

ஆனால் மொத்தமாகப் பார்த்தால் பவுலர்கள் இந்திய அணியின் பேட்டிங்கில் பங்களிப்புச் செய்த தருணங்கள் மிகக் குறைவுதான், ஆனால் இந்த நிலையை நியூஸிலாந்தின் பயிற்சியாளர் ஜான் ரைட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது ஒரு நூதன முறையைக் கையாண்டு மாற்றியதாக விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.

இன்று இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா, ஏன் தென் ஆப்பிரிக்க அணியிலும் கூட பவுலர்கள் நிறைய பங்களிப்பு செய்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்தின் பின் வரிசை வீரர்கள் பங்களிப்பு எப்போதுமே அபரிமிதமானதாக இருந்து வருகிறது.

பாகிஸ்தானில் ஒருகாலத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் தங்களது ‘டெட்லி’ பந்து வீச்சில் உச்சத்தில் இருந்த போது டெய்ல் எண்டர்களை பேசவிடாமல் செய்தது ஒரு புறம் இருக்கட்டும். விவிஎஸ் லஷ்மண் இது தொடர்பாக என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

“இந்திய டெய்ல் எண்டர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு செய்ததற்கான பெருமை ஜான் ரைட்டுக்குத்தான் அளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது பவுலர்களும் தங்கள் பேட்டிங் பங்களிப்பில் பெருமை கொள்ளுமாறு செய்தவர் ஜான் ரைட்தான்.

அனில் கும்ப்ளே, ஹர்பஜன், இஷாந்த் சர்மா, ஜாகீர் கான் இவர்கள் பேட்டிங்கிலும் அவ்வப்போது பிரகாசிக்கக் காரணம் ஜான் ரைட் தான். தங்கள் பேட்டிங் பங்களிப்பிலும் பெருமை கொள்ளும் இந்தப் பவுலர்கள் நமக்குக் கிடைத்தது அதிர்ஷ்டமே.

அதாவது அணியில் உள்ள ஒவ்வொரு பேட்ஸ்மெனுமே ஒவ்வொரு பவுலருக்கு பேட்டிங் பயிற்சியாளர். இதுதான் ஜான் ரைட் கண்ட உத்தி. அந்த வகையில் நான் ஜாகீர் கானுக்கு பேட்டிங் பயிற்சியாளராகச் செயல்பட்டேன்.

ஒவ்வொரு வலைப்பயிற்சி நிறைவிலும் நாங்கள் பவுலர்களுக்கு பந்துகளை த்ரோ செய்து பேட்டிங் பயிற்சி அளிக்க வேண்டும். ” என்றார் லஷ்மண்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x