Published : 27 Jan 2020 07:56 PM
Last Updated : 27 Jan 2020 07:56 PM

நிறுத்த முடியாத சர்பராஸ் கான்: முச்சதத்திற்குப் பிறகு அதிரடி இரட்டைச் சதம்; சப்தம் கேட்கிறதா அணித்தேர்வுக்குழுவுக்கு?

மும்பை வீரர் சர்பராஸ் கானை இப்போதைக்கு நிறுத்தப்போவது யார்? என்ற கேள்வியே ரஞ்சி அரங்கில் தற்போது பேச்சாகி வருகிறது, அன்று உ.பி.க்கு எதிராக 649 ரன்களை விரட்டியதில் கடும் காய்ச்சல் இருமலுடன் முச்சதம் அடித்து விளாசிய சர்பராஸ் கான் இன்று ஹிமாச்சலத்துக்கு எதிராக வெறித்தனமாக 199 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசியுள்ளார்.

அன்றும் தொய்விலிருந்த மும்பையை உ.பி.க்கு எதிராக முச்சதம் விளாசி உற்சாகம் காட்டிய சர்பராஸ் கான் ஹிமாச்சலத்துக்கு எதிராக மும்பை அணி 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பிறகு இவர் இறங்கி அடிக்க ஆரம்பித்ததும் லாத் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 71/4.

அதன் பிறகு கேப்டன் ஆதித்ய தாரே இவருக்குச் சரியான கூட்டாளியாக அமைய ஆட்டம் சூடுபிடித்தது. இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 143 ரன்கள் சேர்த்தனர், அப்போது 62 ரன்களுக்கு தாரே வெளியேறினார், ராகவ் தவன் இவர் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஆனால் சர்பராஸ் கானை ஒன்றும் செய்ய முடியவில்லை 199 பந்துகளில் அதிரடி சதம் கண்டவர் பிறகு முதல் நாள் ஆட்ட முடிவில் 213 பந்துகளில் 32 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 226 என்று ஆட்டமிழக்காமல் உள்ளார். இவருடன் ரஞ்சானே 44 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார்.

மும்பை அணி தன் முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 372 ரன்கள் விளாசியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x