Published : 27 Jan 2020 08:32 AM
Last Updated : 27 Jan 2020 08:32 AM

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: கால் இறுதி போட்டியில் ஜோகோவிச், கிவிட்டோவா

கால் இறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் செக். குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா.

மெல்பர்ன்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிச் சுற்றில் விளையாட செர்பியாவின் நோவக் ஜோகோவிச், செக். குடியரசு வீராங்கனை பெட்ரோ கிவிட்வோவா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர்ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா, கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியாசகாரியாவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் கிவிட்டோவா 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதிக்கு முன்னேறினார்.

அவர் கால் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான ஆஷ்லே பார்டியுடன் மோதவுள்ளார்.

4-வது சுற்றில் ஆஷ்லே பார்டி6-3, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்கவின் அலின் ரிஸ்கேவை வென்றார்.

மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை வாங் 7-6 (7-4), 6-1 என்ற நேர்செட் கணக்கில் துனிசியா வீராங்கனை ஜாபேரிடம் வீழ்ந்தார். அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 6-7 (5/7),6-3, 6-0 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான கோகோ கவுப்பை வீழ்த்தினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் கனடா வீரர் ரோனிக், குரோசியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் மோதினர். இதில் ரோனிக் 6-4, 6-3, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச்சை சந்திக்கிறார்.

4-வது சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4என்ற நேர்செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் டியாகோ ஷார்ட்ஸ்மென்னை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டென்னிஸ் சான்ட்கிரென் 7-6 (7/5), 7-5, 6-7 (2/7), 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் பேபியோ பாக்னினியைச் சாய்த்தார்.

2-வது சுற்றில் பயஸ் ஜோடி

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- லாட்வியாவின் ஜெலனா ஒஸ்டபென்கோ ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பயஸ்-ஒஸ்டபென்கோ ஜோடி 6-7(4), 6-3, 10-6 என்றசெட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்ம் சான்டர்ஸ்-மார்க்போல்மன்ஸ் ஜோடியை வென்றது. மற்றொரு கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-உக்ரைனின் நாடியா கிச்செனோக் ஜோடி 6-4, 7-6(4) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் நிக்கோல் மெலிச்சர்- பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடியை வென்றுகால் இறுதிக்கு முன்னேறியது.

பெடரர் அபாரம்

ஆடவர் 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்ட்டன் பக்சோவிக்ஸை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x