ஆடுகளத்துக்கு ஏற்றார்போல், பேட்டிங்கை மாற்றிவிட்டேன்: ராகுல் பேட்டி

கே.எல்.ராகுல் : படம் உதவி ட்விட்டர்
கே.எல்.ராகுல் : படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read

ஆக்லாந்து ஆடுகளம் முதல் போட்டியில் இருந்ததைப் போல் இல்லை. ஆடுகளம் மாறிவிட்டதால், எனது பேட்டிங்கையும் மாற்றிக்கொண்டேன் என்று ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்தார்

ஆக்லாந்தில் இன்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்தி்ய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிரடியாக ஆடிய ராகுல் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமலிருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். முதல் போட்டியில் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.

இந்த போட்டியின் வெற்றி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், " ஆக்லாந்து ஆடுகளம் முதல் போட்டியில் இருந்ததைப் போல் இல்லை. சிறிது கடினமாகவும், பந்துகள் மெதுவாகவும் வந்தன.
சூழலும் வித்தியாசம், இலக்கு வித்தியாசம், ஆடுகளமும் மாறிவி்ட்டதால் எனது ஆட்டத்தில் மாற்றத்தைச் செய்தேன்.

அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுப்புகள் வேறு அதிகரித்துவிட்டன. ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் விரைவாக ஆட்டமிழந்துவிட்டதால், நான் நின்று விளையாட வேண்டிய நிலையில் இருந்து ஆட்டத்தை முடித்துவைத்தேன்.

ஆட்டத்தையும், சூழலையும் புரிந்து கொண்டு நான் விளையாடுவது எனக்குச் சிறப்பாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு புரிந்து விளையாடுவது களத்தில் நான் நிலையான ஆட்டத்தைத் தருவதற்கு உதவும். எப்போதுமே அணியையும் தொடர்ந்து வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்று அணிக்கு என்ன தேவையோ அதை வழங்க முடியும்." எனத் தெரிவித்தார்

மூன்றாவது டி20 போட்டி ஹேமில்டன் நகரில் வரும் 29-ம் தேதி நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in