

ஆக்லாந்தில் நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
நியூஸிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடஉள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.
ஆக்லாந்தில் இன்று நடக்கும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் போட்டியில் இரு அணிகளிலும் விளையாடிய அதே அணி வீரர்கள்தான் இந்த போட்டியிலும் விளையாடுகிறார்கள். எந்தவிதமான மாற்றமும் வீரர்கள் தேர்வில் செய்யப்படவில்லை.
ஆடுகளம் எப்படி
ஆக்லாந்து ஆடுகளம் பந்துவீச்சுக்கும், அதேசமயம் அடித்து ஆடவும் சாதகமான ஆடுகளமாகும். இதனால், வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகள் நன்றாக எழும்பியும், ஸ்விங் ஆகும். மேலும் பந்துகள் பேட்ஸ்மேனை நோக்கி வேகமாக வரும் என்பதால், அடித்து விளையாடுவதும் எளிது. அதே நேரத்தில் பவுன்ஸராக வீசும் போது அடித்து விளையாடுவது கடினம். ஸ்ட்ரைட் பவுண்டரி மிகவும் குறைந்த தொலைவில் இருப்பதால், பேட்ஸ்மேனுக்கு நேராக வீசுவதை தவிர்க்க வேண்டும். மாறாக ஸ்குயர்லெக் திசை அதிகமான தொலைவில்இருப்பதால் பவுன்ஸர் வீச நெருக்கடி கொடுக்கலாம்