Published : 26 Jan 2020 08:42 AM
Last Updated : 26 Jan 2020 08:42 AM

ஈஸ்ட் பெங்கால் வெற்றி

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கோவை நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 15-வது நிமிடத்தில் பெங்கால் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை அந்த அணியின் வீரர் ஜெமி சாண்டோஸ் கோலாக மாற்றத் தவறினார். இதன் பின்னர் இரு அணியும் போராடிய போதும் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் பெங்கால் அணி வீரர்கள் தீவிர முனைப்புடன் செயல்பட்டனர். 68-வது நிமிடத்தில் ஜெமி சாண்டோஸிடம் இருந்துபந்தை பெற்ற மார்க் ஜிமெனெஸ் பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து வலது காலால் உதைத்து கோல் வலைக்குள் தள்ளினார். இதனால் ஈஸ்ட் பெங்கால் 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 9-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது.

இதை பயன்படுத்தி அந்தஅணியின் ஜெமி சாண்டோஸ் கோல் அடிக்க ஈஸ்ட் பெங்கால்அணி 2-0 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது. இதன் பின்னர் கடைசி வரை போராடியும் சென்னை சிட்டி அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. ஆர்.கிருஷ்ணகுமார்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x