Published : 26 Jan 2020 08:41 AM
Last Updated : 26 Jan 2020 08:41 AM

ஆஸி. ஓபன் 4-வது சுற்றில் ரபேல் நடால்- பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி

மெல்பர்ன்

ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் பிரிவில் முதல் நிலை வீரரான ரபேல்நடால் 4-வது சுறுக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோ 3-வது சுற்றில் தோல்வியடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு3-வது சுற்றில் முதல் நிலை வீரரானஸ்பெயினின் ரபேல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த பேப்லோ காரேனோ பஸ்டாவை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார்.

5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-2, 6-4, 6-7(5-7), 6-4 என்ற செட் கணக்கில் 29-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸையும், 7-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-2, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டஸ்கோவையும் 10-ம் நிலை வீரரான பிரான்சின் கெய்ல் மோன்பில்ஸ் 7-6 (7-2), 6-4, 6-3 என்ற நேர் செட்டில்லத்வியாவின் எர்னெஸ்ட் குல்பிஸையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 2-6, 7-6 (7-3),6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோபினை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார். 15-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 19-ம் நிலை வீரரானஅமெரிக்காவின் ஜான் இஸ்னருக்கு எதிராக 6-4, 4-1 எனமுன்னிலை வகித்த போது காயம்காரணமாக இஸ்னர் வெளியேறினார். இதனால் வாவ்ரிங்கா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வதுசுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 6-7 (4-7), 6-7 (3-7)என்ற நேர் செட் கணக்கில் போராடி 30-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லியுசென் கோவாவிடம் தோல்வியடைந்தார்.

இதேபோன்று 5-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 1-6,2-6 என்ற நேர் செட்டில் 32-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயின் கார்பைன் முகுருசாவிடம், 6-ம் நிலை வீராங்கனை சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 0-6, 1-6 என்ற நேர்செட்டில் 28-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் அனெட் அனெட்கொன்டாவிட்டிடம் தோல்வியடைந்தனர்.

4-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப்6-1, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவாவையும், 17-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியையும் வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தனர்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உக்ரைனின் நாடியா கிச்செனோக் ஜோடியானது 7-5, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜக், உக்ரைனின் லுட்மைலா கிச்செனோக் ஜோடியை வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x