Published : 25 Jan 2020 04:30 PM
Last Updated : 25 Jan 2020 04:30 PM

எதிராளிக்கு ‘பிரேக் பாயிண்ட்’ வாய்ப்பேயளிக்காத நடால்: சக வீரருக்கே அதிர்ச்சி மருத்துவம்

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஸ்பெயினின் இடது கை வீரர் ரஃபேல் நடால், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 3வது சுற்று ஆட்டத்தில் தன் நாட்டைச் சேர்ந்த கரேனோ பஸ்டாவுக்கு அதிர்ச்சி மருத்துவம் அளித்தார்.

இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார் நடால்

6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் பாப்லோ கரேனோவை ஊதித்தள்ளிய நடால் ஆஸி. ஒபன் பட்டம் வென்றால் பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையைச் சமன் செய்வார்.

2009-ல் ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற நடால் இன்றைய ஆட்டத்தில் செம பார்மில் இருந்தார். மொத்தம் 42 வின்னர்களை அடித்த நடால் மொத்தம் 7 முறையே ஷாட்களில் தவறிழைத்தார்.

அனைத்திற்கும் மேலாக ஒரு முறை கூட தனக்கு எதிராக பிரேக் பாயிண்ட் வாய்ப்பை எதிராளிக்கு வழங்கவில்லை என்பது நடால் ஆட்டத்தின் விசேஷமாகும். மொத்தம் ஒரு மணி நேரம் 38 நிமிடங்களில் முழு ஆதிக்க டென்னிஸ் ஆடி பாப்லோவை வெளியேற்றினார்.

4வது சுற்றில் நிக் கிர்கியாஸ் அல்லது கரேன் கேச்சனோவை எதிர்கொள்வார் நடால். தன் நாட்டு வீரருக்கு எதிரகா நடால் 18 முறை தொடர்ச்சியாக வென்றுள்ளார். கரேனோ பஸ்டாவை இத்துடன் சேர்த்து 5 முறை வென்றுள்ளார் பஸ்டா ஒருமுறை கூட நடாலை வீழ்த்தியதில்லை.

முதல் செட்டில் பஸ்டா சர்வை முறியிடுத்து 3-0 என்று சடுதியில் முன்னிலை பெற்ற நடால் முதல் செட்டை 6-1 என்று கைப்பற்றினார். 2வது செட்டிலும் தன் 2வது சர்வில் சர்வை கோட்டை விடாமல் வெற்றி பெற 2வது செட்டையும் 6-2 என்று 56 நிமிடங்களில் கைப்பற்றினார்.

3வது செட்டில் 5ம் கேமில் பிரேக் செய்த நடால் 6-4 என்று கைப்பற்றி மொத்தம் 98 நிமிடங்களில் வெற்றியைச் சாதித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x