

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 11 ஓவர்களில் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்று முதல் இன்னிங்க்ஸை ஆடிவரும் இலங்கை டெஸ்ட் போட்டிக்கே உரிய நிதானத்தோடு துவங்கியது.
7-வது ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய பவுன்சர் பந்தை எதிர் கொள்ள முடியாமல், இலங்கை துவக்க வீரர் கருணரத்னே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே வருண் ஆரோன் வேகத்தில் மற்றொரு துவக்க வீரர் சில்வாவும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தவான் தவறவிட்ட கேட்ச்
முன்னதாக 4-வது ஓவரில் வருண் ஆரோன் வீசிய பந்து சில்வாவின் பேட்டில் பட்டு ஸ்லிப் பகுதிக்குச் சென்றது. ஆனால் அங்கு ஃபீல்ட் செய்து கொண்டிருந்த ஷிகர் தவான், தோள் உயரத்துக்கு வந்த கேட்சை தவறவிட்டார்.