Published : 23 Jan 2020 09:57 AM
Last Updated : 23 Jan 2020 09:57 AM

தாய்லாந்து பாட்மிண்டனில் சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி காந்த், சாய்னா நெவால், சமீர்வர்மா ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினர்.

பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-12, 14-21, 12-21என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷேசர் ஹிரென்ருஸ்டாவிடோவிடம் தோல்வியடைந்தார்.

அதேவேளையில் சமீர் வர்மா 16-21, 15-21 என்ற நேர் செட்டில்மலேசியாவின் லீ ஜி ஜியாவிடமும், ஹெச்.எஸ்.பிரனோய் 17-21, 22-20, 19-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லியு டேரனிடமும் வீழ்ந்தனர்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால் 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் ஹஜ்மார்க்கிடம் தோல்வியடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x