Published : 22 Jan 2020 09:07 PM
Last Updated : 22 Jan 2020 09:07 PM

மனிதர்கள் யானைகளுக்கு வழி விட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

நீலகிரி யானைகள் பாதுகாப்புப் பகுதி குறித்த தமிழக அரசின் உத்தரவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் ‘யானை ஒரு ஜென்டில்மேன், மனிதன் அதற்கு வழிவிட்டுத்தான் ஆகவேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் ஏ.போப்டே கூறும்போது, “யானைகள் பெரிது, சக்தி வாய்ந்தவை ஆனால் மனிதர்களைக் கண்டு எளிதில் பயப்படக்கூடியவை, நாமும் ஒரு அச்சுறுத்தலான சுற்றுச்சூழல் நிலவரத்தை நாம் தற்போது எதிர்கொண்டு வருகிறோம். வேட்டையாடுதல் தொழிலில் புழங்கும் பணத்தை நினைத்துப் பாருங்கள். அசாமில் எப்படி காண்டா மிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன என்பதைப் பாருங்கள்.. மனிதன் யானைக்கு வழிவிட்டுத்தான் ஆகவேண்டும்,, யானையின் பாதையில் இடையூறு ஏற்படுத்தப்படுவதை நாம் அனுமதிக்கப் போவதில்லை” என்றார் தலைமை நீதிபதி போப்டே.

தமிழக அரசு யானைகள் நடமாட்டப்பகுதி என்று அடையாளப்படுத்திய ஆனால் பழங்குடிமக்கள் வீடுகள் நீங்கலாக, அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் அல்லது இடிக்க வேண்டும் என்று நீதிமன்ற பரிந்துரையாளர் ஏ.டி.என்.ராவ் அறிக்கை குறித்த வழக்கை விசாரித்தது. ஊட்டி -மைசூர் வழியில் இருக்கும் முதுமலை தேசியப் பூங்காவுக்கு அருகில் உள்ள மசினாகுடி பகுதி யானைகள் பாதுகாப்புப் பகுதி என்று தமிழ்நாடு அரசு அடையாளப்படுத்தியது.

இந்த வழக்கில் நீதிமன்றம் தன் உத்தரவுகளை தள்ளி வைத்துள்ளது. ஏனெனில் சீல் வைப்பது, இடித்துத் தள்ளுவது போன்ற தனிப்பட்ட வழக்குகள் மீது நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் வாய்மொழியாக தலைமை நீதிபதி கூறும்போது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவினால் பாதிக்கப்படுவோரின் குறைகள் கேட்கப்பட்டு முடிவெடுக்கப்படும், என்றார்.

அப்பகுதியில் ரிசார்ட் வைத்திருக்கும் உரிமையாளர்கள் சிலர் மனிதனும் யானையும் சேர்ந்து வாழ முடியும் என்ரு கூறியதற்கு நீதிபதி போப்டே, “ஏனெனில் யானை ஒரு ஜெண்டில்மேன், .. காட்டுக்குள் நீங்கள் ஏன் செல்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

ராவ் தனது அறிக்கையில் தமிழ்நாடு அரசின் 2010-ம் ஆண்டு உத்தரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

1996ம் ஆண்டு ஏ.ரங்கராஜன் என்பவர் தொடுத்த பொதுநல மனுவை கோர்ட் விசாரித்து வருகிறது, அது தொடர்பாக யானைகள் பாதுகாப்புப் பகுதியில் கட்டுமானங்கள் அனுமதிக்கப் படக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகியில் உள்ள யானைகள் பகுதி 22.64 கிமீ நீளமும் 1.5 கிமீ அகலமும் கொண்டது. கிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே சுமார் 900 யானைகள் சென்று வருவதற்கான முக்கிய இணைப்புப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x