Last Updated : 21 Jan, 2020 07:36 PM

 

Published : 21 Jan 2020 07:36 PM
Last Updated : 21 Jan 2020 07:36 PM

ரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன் அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் சச்சின், வால்ஷ்

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நல நிதி கிரிக்கெட் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆஸி. முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் உருவாக உள்ளன. இதில் ரிக்கி பாண்டிங் அணிக்கு மே.இ.தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கோர்ட்னி வால்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வார்ன் தலைமையில் உருவாகும் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும் பயிற்சி அளிக்க உள்ளனர்

கேஎப்சியின் பிக் பாஷ் டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்பாக வரும் பிப்ரவரி 8-ம் தேதி இந்த போட்டி நடக்க உள்ளது.
இந்த போட்டியில் ரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன், ஜஸ்டிங் லாங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷேன் வாட்ஸன், அலெக்ஸ் பிளாக்வெல், மைக்கேல் கிளார்க் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறாராகள்.

முன்னாள் கேப்டன்கள் ஸ்டீவ் வாஹ், ஜோன்ஸ் ஆகியோர் விளையாட்டில் இல்லாத பணிகளைச் செய்கின்றனர். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் டிக்கெட் கட்டணம் அனைத்தும் காட்டுத் தீயை அணைக்க உதவி வரும் ரெட் கிராஸ் அமைப்புக்கு வழங்கப்பட உள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உருவாகியுள்ள காட்டுத் தீயால் இதுவரை 29 பேர் பலியாகியுள்ளார்கள், 2ஆயிரம் மக்கள் வீடு இழந்துள்ளார்கள்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கென் ராபர்ட் கூறுகையில், " சச்சின் டெண்டுல்கர், கோர்னி வால்ஷ் இருவரின் பங்களிப்பையும் நாங்கள் மனமுவந்து வரவேற்கிறோம். இருவரும் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள்.ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய மக்களும் இந்த போட்டியை ரசித்து நிதியுதவி அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x