Published : 21 Jan 2020 10:21 AM
Last Updated : 21 Jan 2020 10:21 AM

ஒரு தோல்விதானே என்ற எண்ணம் வேண்டாம்: வீரர்களுக்கு கோலி விடுத்த எச்சரிக்கை

நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்வதன் அவசியத்தை வீரர்களிடம் வலியுறுத்தியதாகக் கூறிய விராட் கோலி நியூஸிலாந்தில் 2 போட்டிகள் சென்ற பிறகு எழுவது கூடாது என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் டெத் பவுலிங்கில் ஆஸ்திரேலியாவை மடக்கி 300க்குள் மட்டுப்படுத்திய இந்திய அணி பிறகு ரோஹித் சர்மாவின் அபார சதம் கேப்டன் விராட் கோலியின் விட்டுக் கொடுக்காத தீவிர இன்னிங்ஸ் ஆகியவற்றினால் சுலபமாக வென்று தோல்விக்குப் பிறகு மீண்டெழுந்து தொடரை 2௧ என்று கைப்பற்றியது.

ஆஸி.க்கு எதிரான 3வது போட்டியில் இந்திய வீரர்களிடம் கூறியது என்ன? - மனம் திறக்கிறார் விராட் கோலி

நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்வதன் அவசியத்தை வீரர்களிடம் வலியுறுத்தியதாகக் கூறிய விராட் கோலி நியூஸிலாந்தில் 2 போட்டிகள் சென்ற பிறகு எழுவது கூடாது என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் டெத் பவுலிங்கில் ஆஸ்திரேலியாவை மடக்கி 300க்குள் மட்டுப்படுத்திய இந்திய அணி பிறகு ரோஹித் சர்மாவின் அபார சதம் கேப்டன் விராட் கோலியின் விட்டுக் கொடுக்காத தீவிர இன்னிங்ஸ் ஆகியவற்றினால் சுலபமாக வென்று தோல்விக்குப் பிறகு மீண்டெழுந்து தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

இதனையடுத்து நியூஸிலாந்து தொடரில் செய்ய வேண்டியது என்ன என்று ஆசி.க்கு எதிரான 3வது போட்டியிலேயே வீரர்களிடம் களத்தில் விராட் கோலி கூறும்போது, "வீரர்களுடன் குழுமி நான் கூறியதென்னவெனில், ‘இது கடைசி போட்டி இதில் வென்று விட்டால் நியூஸிலாந்து தொடருக்கு மகிழ்ச்சியுடன் செல்ல முடியும். தோற்றோமானால் அது அனைவரின் கேள்விக்கும் இடமாகும், மேலும் ஒரு தோல்விதானே என்று நாம் ஒதுக்கி விட்டுச் செல்ல முடியாது’ என்றேன்.

ஆஸி.க்கு எதிரான கடைசி 2 போட்டிகளும் கடினமானவை, நெருக்கடியில் வெல்லும் போது அது நம் நம்பிக்கையை அதிகரித்து அதனை எதிர் வரும் தொடர்களுக்கும் கொண்டு செல்ல முடியும். எனவே நியூஸிலாந்து தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

டாஸில் வென்றாலும் தோற்றாலும் எதிரணியினர் நமக்கு அளிக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வினையாற்ற வேண்டும், நம்மை வெளிப்படுத்தும் விதமான கிரிக்கெட் நம் ஆட்டத்தை மேம்படுத்துவதோடு ஆட்டத்தின் போக்கையும் நம் பக்கம் மாற்றக்கூடியது.

கடந்த 6-8 மாதங்கள் இந்திய கிரிக்கெட் பெரிய வெளிப்பாட்டுக் காலக்கட்டத்தில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது, இளம் வீரர்கள் தங்கள் ஆட்டத்தை உயர்தரத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்வது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x