Published : 21 Jan 2020 08:58 AM
Last Updated : 21 Jan 2020 08:58 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் பெடரர், செரீனா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று தொடங்கிய இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 75-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை எதிர்த்து விளையாடினார். இதில் பெடரர் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் கால் பதித்தார்.

6-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் 6-0, 6-2, 6-3 என்ற நேர் செட்டில்95-ம் நிலை வீரரான இத்தாலியின் சால்வடோர் கருசோவையும், 8-ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் தகுதி நிலை வீரரானஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ ஹாரிஸையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர். 13-ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ் 3-6, 7-6, 1-6, 6-7 என்ற செட் கணக்கில் 3 மணிநேரம் 13 நிமிடங்கள் போராடி 67-ம் நிலை வீரரான ஹங்கேரி
யின் மார்டன் ஃபுசோவிக்ஸிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் 120-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் லெசியா சுரேன்கோவையும், 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமிஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவையும், 7-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பெட்ரோ விட்டோவா 6-1, 6-0 என்ற நேர்செட்டில் சகநாட்டைச் சேர்ந்த கேத்ரினா சினிகோவாவையும், 8-ம் நிலை வீராங்கனையானஅமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-3 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் அனஸ்டசியா போட்போவாவையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர். மற்ற ஆட்டங்களில் ரஷ்யாவின் கேத்ரினாஅலெக்ஸான்ட்ரோவா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

55-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லிம்யஸ், சகநாட்டைச் சேர்ந்த 15 வயதான கோகோ காஃபை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் 39 வயதான வீனஸை 7-6 (7-5), 6-3 என்றநேர் செட்டில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் 67-ம் நிலை வீராங்கனையான கோகோ காஃப். கிராண்ட் ஸ்லாம் தொடரில் வீனஸை, கோகோ காஃப் வீழ்த்துவது இது 2-வது முறையாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரிலும் வீனஸை தோற்கடித்திருந்தார் கோகோ காஃப்.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்2-வது சுற்றில் பெடரர், செரீனா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x