

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இதில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய ஏ அணிக்கு டெல்லியைச் சேர்ந்த உன்முக்த் கேப்டனாகவும்,கர்நாடகத்தைச் சேர்ந்த கருண் நாயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முத்தரப்பு தொடரின் அனைத்து ஆட்டங்களும் சென்னையில் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் 14-ம் தேதி நடைபெறுகிறது.
இதுதவிர தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய ஏ அணிக்கு அம்பட்டி ராயுடு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடர் வரும் 18-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் தொடங்குகிறது.
முத்தரப்பு தொடருக்கான அணி: உன்முக்த் சந்த் (கேப்டன்), மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, கருண் நாயர் (துணை கேப்டன்), கேதார் ஜாதவ், சஞ்சு ஜாம்சன், அக் ஷர் படேல், பர்வீஸ் ரசூல், கரண் சர்மா, தவல் குல்கர்னி, சந்தீப் சர்மா, ரஷ் கலாரியா, மன்தீப் சிங், குருகீரத் சிங், ரிஷி தவன்.
டெஸ்ட் அணி: அம்பட்டி ராயுடு (கேப்டன்), கருண் நாயர், அபினவ் முகுந்த், அங்குஷ் பெய்ன்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், பாபா அபராஜித், விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், அக் ஷர் படேல், கரண் சர்மா, அபிமன்யூ மிதுன், ஷர்துல் தாக்குர், ஈஸ்வர் பாண்டே, ஷெல்டான் ஜாக்சன், ஜிவான்ஜோத் சிங்.-பிடிஐ