Published : 17 Jan 2020 13:29 pm

Updated : 17 Jan 2020 13:29 pm

 

Published : 17 Jan 2020 01:29 PM
Last Updated : 17 Jan 2020 01:29 PM

ரிஷப் பந்த்திற்குப் பதிலாக எந்த வடிவத்திலும் 40 ரன்கள் சராசரி இல்லாத கே.எஸ். பரத் இந்திய ஒரு நாள் அணிக்கு அழைப்பு

ks-bharat-called-in-as-cover-for-rishabh-pant
கே.எஸ்.பரத்.

கமின்ஸ் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கியதில் கன்கஷன் ஏற்பட்டு பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்றுள்ள ரிஷப் பந்த்திற்குப் பதிலாக இந்திய ஒருநாள் அணியில் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்துக்கு வேண்டப்பட்ட ஆந்திர விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் சேர்க்கப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன், இஷான் கிஷணை நியூஸிலாந்துக்கு இந்தியா ஏ அணிக்காக ஆட அனுப்பிவிட்டு கே.எஸ். பரத்தை இந்தியத் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.

26 வயதான கே.எஸ். பரத் 74 முதல் தரப் போட்டிகளில் 4143 ரன்களை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 100க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இவருக்குப் பதிலாக விருத்திமான் சஹாவே அனுபவசாலிதான், சிறந்த விக்கெட் கீப்பர்தான்.

தினேஷ் கார்த்திக்கிற்குக் கூட இன்னொரு வாய்ப்பு அளித்திருக்கலாம்.

இதற்கிடையே ரிஷப் பந்த் உடல்நிலை சரியாகிவிட்டால் 3வது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடைபெறும் போது ரிஷப் பந்த் மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கே.எஸ். பரத்தின் முதல் தர சராசரி 37.66, லிஸ்ட் ஏ சராசரி 28.14., டி20 சராசரி 17.08.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

KS Bharat called in as cover for Rishabh Pantரிஷப் பந்த்திற்குப் பதிலாக எந்த வடிவத்திலும் 40 ரன்கள் சராசரி இல்லாத கே.எஸ். பரத் இந்திய ஒரு நாள் அணிக்கு அழைப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author