கால் இறுதியில் சிந்து தோல்வி

கால் இறுதியில் சிந்து தோல்வி
Updated on
1 min read

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.

ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் உலக சாம்பியனும் 6-ம் நிலை வீராங்கனையுமான சிந்து, 14-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா தகாஹஷியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-16, 16-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in