

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் நாடியா கிச்செனோக் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் சானியா மிர்சா, நாடியா கிச்செனோக் ஜோடி அமெரிக்காவின் வானியா கிங், கிறிஸ்டியானா மெக்ஹாலே ஜோடியை எதிர்த்து விளையாடியது.
ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா, நாடியா ஜோடி 6-2 4-6 10-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரை இறுதி சுற்றில் சானியா, நாடியா ஜோடி ஸ்லோவேனியாவின் தமரா ஜிடன்செக், செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா ஜோடியை எதிர்கொள்கிறது.