Published : 15 Jan 2020 14:08 pm

Updated : 15 Jan 2020 14:08 pm

 

Published : 15 Jan 2020 02:08 PM
Last Updated : 15 Jan 2020 02:08 PM

15 ஆண்டுகளுக்குப் பிறகு...: மும்பை ஒருநாள் போட்டி சாதனைத் துளிகள்

after-15-years-mumbai-odi-interesting-stats

மும்பை ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டிகள் குறித்த சுவாரஸ்யமான புள்ளி விவரத் துளிகள்:

இந்திய அணி 5 முறை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இதுவரை தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இது இத்தகைய முதல் தோல்வி, இந்தியாவில் இந்தியா பெறும் 2வது 10 விக்கெட் தோல்வியாகும் இது. முன்னதாக 2005ம் ஆண்டு ஈடன் கார்டன்ஸில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 10 விக்கெட்டுகளில் தோல்வி கண்ட பிறகு 15 ஆண்டுகள் கழித்து ஆஸி.க்கு எதிராக நேற்று 10 விக்கெட்டுகளில் தோல்வி கண்டது.

ஆஸ்திரேலிய அணிக்கு இது 5வது 10 விக். வெற்றியாகும் 2007 உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக வென்ற பிறகு தற்போது 10 விக்கெட்டுகளில் வென்றுள்ளது.

முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி 2017-ல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 279/0 என்று வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலியா 2வது இடத்தில் 258/0 என்று ஒருநாள் போட்டியை வென்றுள்ளது.

258 ரன்கள் வார்னர்-பின்ச் கூட்டணி இந்தியாவுக்கு எதிராக எந்த விக்கெட்டுக்குமான பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும். பெர்த்தில் 2016-ல் ஜார்ஜ் பெய்லி, ஸ்டீவ் ஸ்மித் 242 ரன்கள் சேர்த்ததே இந்தியாவுக்கு எதிரான எந்த விக்கெட்டுக்குமான பெரிய கூட்டணியாக இருந்தது, தற்போது வார்னர், பிஞ்ச் முறியடித்துள்ளனர்.

2000-ம் ஆண்டு ஹெர்ஷல் கிப்ஸ், கேரி கர்ஸ்டன் முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்ததே இந்தியாவில் தொடக்கக் கூட்டணிக்கான எதிரணியின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது, தற்போது இதையும் உடைத்து விட்டனர் பிஞ்ச், வார்னர் கூட்டணி.

அதே போல் விரட்டலில் இரண்டு ஆஸி. தொடக்க வீரர்களும் சதம் எடுப்பது நேற்று 2ம் முறையாகும் இதற்கு முன்பாக பிரிஸ்பனில் இலங்கைக்கு எதிராக 2006-ல் கில்கிறிஸ்ட், சைமன் கேடிச் இருவரும் சதம் கண்டனர்.

ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக வார்னர்- பிஞ்ச் கூட்டணியின் சராசரி 106. 10 முறை இந்தியாவுக்கு எதிராக இவர்கள் தொடங்கியுள்ளனர், இதில் 954 ரன்களை விளாசியுள்ளனர். இதில் 3 சதக்கூட்டணிகளூம் 4 அரைசதக் கூட்டணியும் அடங்கும்.

வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்கள் மைல்கல்லைக் கடந்தார், டீன் ஜோன்ச் 128 ரன்களில் இந்த மைல்கல்லை எட்ட, வார்னர் 115 இன்னிங்ஸ்களில் சாதித்துள்ளார்.


After 15 years... Mumbai ODI Interesting Stats15 ஆண்டுகளுக்குப் பிறகு...: மும்பை ஒருநாள் போட்டி சாதனைத் துளிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author