Published : 14 Jan 2020 02:39 PM
Last Updated : 14 Jan 2020 02:39 PM

ஷிகர் தவணின் புதிய சாதனை: சச்சின், தோனி, கோலி பட்டியலில் இணைந்தார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஒரு நாள் போட்டியில் தொடக்க நிதானத்துக்குப் பிறகு ஷிகர் தவண் பிரமாதமாக ஆடிவருகிறார். அதுவும் ஒரே ஓவரில் ஸ்டார்க்கை 2 பவுண்டரிகளையும் சற்று முன் பாட் கமின்ஸை 2 பவுண்டரிகளும் அடித்தது கிளாஸ் ரகம்.

அதுவும் முதல் 4 பந்துகள் கமின்ஸ் ரன் கொடுக்காமல் வீச எங்கு இதுவும் இன்னொரு மெய்டனாகி விடுமோ என்று பார்த்த நேரத்தில் சற்றே ஒதுங்கிக் கொண்டு கமின்ஸ் பந்தை தேர்ட் மேன் மேல் தூக்கி அடித்த நான்கு ரன்களும் அடுத்த பந்தே கிரீசை நன்றாகப் பயன்படுத்தி பந்தை நன்றாக வரவிட்டு கடைசி நேரத்தில் வெட்டி ஆட பேக்வர்ட் பாயிண்ட் பவுண்டரிக்குப் பறந்ததும், பார்ம் நிரந்தரமல்ல கிளாஸ் நிரந்தரம் என்ற கிரிக்கெட் பழமொழிக்கு உதாரணமாக அமைந்தது.

இது ஒரு புறமிருக்க ஷிகர் தவண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த 5வது இந்திய வீரரும், உலக அளவில் 32வது வீரருமாகத் திகழ்கிறார்.

சச்சின், தோனி, கோலி, ரோஹித் சர்மா பட்டியலில் இதன் மூலம் இணைந்துள்ளார்.

ஆஸி.க்கு எதிராக ஷிகர் தவணின் கடைசி 3 இன்னிங்ஸ்கள் 143, 12, 117, தற்போது 45 பந்துகளில் 37 பேட்டிங். இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 59/1, ராகுல் 15 பேட்டிங், பந்துகள் இடுப்புக் கீழ் என்ன வேகத்தில் வந்தாலும் நம் ஆட்கள் சூரப்புலிகள், ஆகவே இந்தப் பிட்சும் அந்த வகையறாவைச் சேர்ந்ததுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x