

மும்பையில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளது. ரோஹித், தவண்,ராகுல் மூவருமே அணியில் உள்ளனர்.
சற்றுமுன் ரோஹித் சர்மா, ஸ்டார்க் வீசிய வைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தை மிட் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களில் வெளியேறினார்.
ஷிகர் தவண் 2 ரன்களுடனும், ராகுல் 4 ரன்களுடனும் களத்தில் நிற்க இந்திய அணி 5.1 ஓவர்களில் 18/1 என்று எச்சரிக்கையுடன் தொடங்கியுள்ளது. ரிஷப் பந்த் அணியில் உள்ளார், ஸ்பின்னர்களில் குல்தீப், ஜடேஜா உள்ளனர். பும்ரா, ஷர்துல் தாக்குர், ஷமி வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்டிங்கில் ரோஹித், தவண், ராகுல், கோலி, அய்யர் உள்ளனர்.