Published : 13 Jan 2020 02:47 PM
Last Updated : 13 Jan 2020 02:47 PM

ஸ்டீவ் ஸ்மித்தை சீண்டும் கவுதம் கம்பீர் 

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிச்சயம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விட இந்திய கேப்டன் விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்து ஆஸி.யைச் சீண்டியுள்ளார்.

விராட் கோலி 11,000 ரன்களை 43 ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளார், மாறாக ஸ்டீவ் ஸ்மித் இப்போதுதான் 4000 ரன்களையே எட்டவிருக்கிறார் இதில் 8 சதங்களை எடுத்துள்ளார் ஸ்மித்.

இந்நிலையில் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்குக் கூறும்போது, “வெள்ளைப்பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தை விட விராட் கோலிதான் சிறந்த வீரர். இதில் ஒப்பீடே இல்லை. வெள்ளைப்பந்தில் நான் ஒரு போதும் ஸ்டீவ் ஸ்மித்தையும் கோலியையும் ஒப்பிட மாட்டேன். ஸ்மித் எந்த இடத்தில் இறங்கப் போகிரார் என்பதை பார்க்க விரும்புகிறேன்.

ஸ்டீவ் ஸ்மித் 4ம் நிலையில் இறங்குவாரா, அல்லது 3இல் இறங்கி லபுஷான் 4ம் நிலையில் இறங்குவாரா, அல்லது லபுஷான் 3ம் நிலையில் இறங்குவாரா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.” என்றார்.

வடிவேலு நகைச்சுவை ஒன்றில் வருவது போல் ஏற்கெனவே இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே வாய்க்கால் தகராறு இருக்கிறது, இப்போது கவுதம் கம்பீர் வேறு ஸ்மித், கோலியை ஒப்பிடும் போது ஒருநாள், டி20-யில் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டாரா, பார்ப்போம் ஸ்மித் பொங்கி எழுகிறாரா என்பதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x