தாயான பிறகு முதல் சாம்பியன் பட்டம்:  பரிசுத் தொகையான 62,300 ஆஸி. டாலர்களையும் காட்டுத்தீ நிவாரணத்துக்கு அளித்த செரீனா வில்லியம்ஸ்

தாயான பிறகு முதல் சாம்பியன் பட்டம்:  பரிசுத் தொகையான 62,300 ஆஸி. டாலர்களையும் காட்டுத்தீ நிவாரணத்துக்கு அளித்த செரீனா வில்லியம்ஸ்
Updated on
1 min read

தாயான பிறகு முதல் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் செரீனா வில்லியம்ஸ். ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் தொடர் இறுதியில் சக அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை 6-3, 6-4 என்று வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இது செரீனாவின் 73வது மகளிர் உலக டென்னிஸ் கூட்டமைப்பு போட்டி சாம்பியன் பட்டமாகும்.

ஆனால் இதையும் விட மகிழ்ச்சிகரமான அதிர்ச்சி அறிவிப்பு என்னவெனில் சாம்பியன் பட்ட பரிசுத்தொகையாக கிடைத்த 62,300 ஆஸ்திரேலிய டாலர்களை ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க செரீனா வில்லியம்ஸ் முன்வந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் செரீனா வென்றுள்ள முதல் கோப்பை இதுவே ஆகும்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய செரீனா, போட்டியில் வென்ற பரிசுத் தொகையைய ஆஸ்திரேலிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியாக அளிப்பதாக அறிவித்தார்.

ஆக்லாந்து கிளாசிக் இறுதிப் போட்டியின் முதல் சர்வையே பெகுலா முறியடிக்க சற்றே துவண்டார் செரீனா. ஆனால் அதன் பிறகுதான் தான் ஒரு சாம்பியன் என்பதை நிரூபித்து வரிசையாக வெற்றிகளைப் பெற்ரு 6-3 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு 49 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.

பிறகு 2வது செட்டில் பெகுலா போராடி கடைசி சாம்பியன்ஷிப் புள்ளியை செரீனாவுக்கு விட்டுக் கொடுக்காமல் போராடினார், ஆனாலும் கடைசியில் செரீனா வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in