நியூஸிலாந்து டி20 தொடர்: முக்கிய வீரர்கள் அணிக்குத் திரும்பினர், சஞ்சு சாம்சன் நீக்கம்- இந்திய அணி அறிவிப்பு

நியூஸிலாந்து டி20 தொடர்: முக்கிய வீரர்கள் அணிக்குத் திரும்பினர், சஞ்சு சாம்சன் நீக்கம்- இந்திய அணி அறிவிப்பு
Updated on
1 min read

இம்மாதம் 24ம் தேதி தொடங்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, மொத்தம் 16 வீரர்கள் கொண்ட அணிக்கு முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, மொகமது ஷமி அணிக்குத் திரும்பியுள்ளனர்.

வழக்கம் போல் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். மொகமது ஷமி அணிக்குத் திரும்பியதன் மூலம் நியூஸி. அணிக்கு சிக்கல்தான், ஏனெனில் பும்ரா, நவ்தீப் சைனியுடன், மொகமது ஷமியும் இணைய 3 எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் நியூஸிலாந்துக்கு குடைச்சல் கொடுக்கக் காத்திருக்கின்றனர். இலங்கைக்கு எதிராக 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷர்துல் தாக்குர் அணியில் இருக்கிறார்,

ஷர்துல் தாக்கூரின் இன்னொரு பெரிய சாதகம் நல்ல பினிஷிங் அதிரடி வீரராக அவர் இருப்பதுதான், சேத்தன் சர்மாவுக்குப் பிறகு அந்த டவுனில் ஒரு பிக் ஹிட்டர் கிடைத்துள்ளார்.

ஷிகர் தவண் என்ன தடவினாலும் அவருக்கு ‘லாபி’ உள்ளது, அதனால் அணியில் இடம்பெற்றுள்ளார். ஸ்பின்னர்களில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய டி20 அணி வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவண், கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப், சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷமி, சைனி, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in