2017-க்குப் பின் முதல்முறையாக பட்டம் வென்ற செரீனா

நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். மகள் அலெக்ஸிஸுடன் உற்சாகமாக கோப்பையை கையில் ஏந்தியுள்ள செரீனா. படம்: ஏஎப்பி

Updated on
1 min read

பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப னில் பட்டம் வென்ற பிறகு தற் போது பட்டம் வென்றுள்ளார்.

2017-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்றார் செரீனா. அதன்பின் கர்ப்பிணியாக இருந்ததால் டென் னிஸில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். குழந்தை பெற்ற பின் னர் மீண்டும் தீவிர பயிற்சி மேற் கொண்டு டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றார்.

இதனால் சில போட்டிகளில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.

ஆனாலும் பல இறுதிப் போட்டி களில் அவர் தோல்வி கண்டார். இந்நிலையில் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்த ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா.

நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில் அவர், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டு விளை யாடினார். இதில் செரீனா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in