

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆலோ சனைக் குழு (சிஏசி) உறுப்பினர் களாக முன்னாள் இந்திய அணி வீரர்கள் மதன்லால், கவுதம் கம்பீர் ஆகியோரைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறும் போது, “விரைவில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் விவரம் வெளியாகும். இவர்கள் அடுத்த 4 வருடங்களுக்கு இந்தப் பணி யில் நீடிப்பார்கள். ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக மதன் லால், மக்களவை எம் பி. கவுதம் கம்பீர் ஆகியோரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதன்லால் இந்தியாவுக்காக 39 டெஸ்ட் போட்டிகள், 67 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1983-ல் நடை பெற்ற உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர் மதன்லால். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி தந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனைக் குழுவின் 3-வது உறுப்பினராக மும்பை யைச் சேர்ந்த முன்னாள் வீராங் கனை சுலக்சனா நாயக் நியமிக்கப் படுவார். அவர் இந்திய அணிக் காக 2 டெஸ்ட், 46 ஒரு நாள் போட்டி களில் விளையாடி இருக்கிறார்.
மேலும் இந்த ஆலோசனைக் குழு விரைவில் கூடி தேர்வுக் குழுவுக்காக 2 புதிய உறுப்பினர் களை நியமிக்கவுள்ளது. பதவிக் காலம் முடிந்து செல்லவுள்ள தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், உறுப்பினர் ககன் கோடா ஆகியோருக்குப் பதிலாக புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் குழு உறுப்பினர்களாக உள்ள சரண்தீப் சிங், தேவங் காந்தி, ஜதின் பரஞ்ச்பே ஆகியோருக்கு இன்னும் ஓராண்டு பதவிக்காலம் உள்ளது.
அதைப் போலவே ஜூனியர் அணிக்கான தேர்வுக் குழுவிலும் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது” என்றார். - பிடிஐ