

புனேயில் நடைபெறும் இறுதி டி20 போட்டியில் இலங்கை டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளது, இந்திய அணியில் சஞ்சு சாம்சன், மணீஷ் பாண்டே இருவரும் ஆடுகின்றனர். ரிஷப் பந்த் இல்லை.
இந்திய அணி வருமாறு:
தவண், ராகுல், கோலி, அய்யர், சாம்சன், மணீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், தாக்குர், சாஹல், பும்ரா நவ்தீப் சைனி
இலங்கை அணி:
குணதிலகா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் பெரேரா, ஒஷாதா பெர்னாண்டோ, மேத்யூஸ், சனகா, தனஞ்ஜயா, ஹசரங்கா, சண்டகன், மலிங்கா, குமாரா
2வதாக பவுலிங் செய்யும் போது பனிப்பொழிவு இருக்கும் என்பதே இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்ததற்குக் காரணம் என்று லஷித் மலிங்கா தெரிவித்தார்.
விராட் கோலி, டாஸ் எங்களுக்கு பொருட்படுத்தத் தேவையில்லாத அம்சம், நாங்கள் முதலில் பேட் செய்யவே முடிவெடுத்திருப்போம் என்றார்.