Published : 10 Jan 2020 03:38 PM
Last Updated : 10 Jan 2020 03:38 PM

இதுவரை கிரிக்கெட்டில் பிடிக்கப்படாத கேட்ச்; சாதுரியமா? விதிமீறலா: பிக் பாஷ் லீகில் சுவாரஸ்யம்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் போட்டியில் இதுவரை கிரிக்கெட் கண்டிராத கேட்ச் ஒன்று எல்லைக்கோட்டு கேட்ச் விதிமுறைகளுக்குச் சவால் அளிப்பதாக அமைந்தது.

ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கும் பிரிஸ்பன் ஹீட் அணிக்கும் இடையிலான பிக்பாஷ் டி20 லீக் போட்டியில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. ஹோபார்ட் கேப்டன் மேத்யூ வேட் பவுண்டரியை நோக்கி தூக்கி ஒரு ஷாட்டை அடிக்க பவுண்டரியில் மாட் ரென்ஷா, இங்கிலாந்தின் அதிரடி வீரர் டாம் பான்ட்டன் பிடித்த ரிலே கேட்ச் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டாலும், இது விதிமுறைகளுக்குப் பொருந்தக் கூடியாதா என்ற விவாதங்களைக் கிளப்பியது.

மேத்யூ வேட் 61 ரன்களில் இருந்த போது லாங் ஆன் பவுண்டரியை நோக்கி ஒரு ஷாட்டை தூக்கி அடித்தார், பந்து சிக்சருக்குச் சென்றது. அங்கு நின்று கொண்டிருந்த பிரிஸ்பன் ஹீட் வீரர் மாட் ரென்ஷா எம்பிப் பந்தை பிடிக்கப் பார்த்தார் ஆனால் பேலன்ஸ் தவறிவிடுவோம் என்று தெரிந்து பந்தை காற்றில் தட்டி விட்டு, இவர் பவுண்டரியைத் தாண்டி சென்று விட்டார்.

ஆனால் பந்து சிக்சர் என்று அறிவிக்கும் நிலையில் இருந்த போது மீண்டும் எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்த ரென்ஷா எம்பி பந்தை பவுண்டரிக்கோட்டுக்கு உள்ளே அதாவது விளையாடும் இடத்துக்கு பவுண்டரி அருகே தட்டி விட அதனை பான்ட்டன் கேட்ச் ஆக்கினார், மேத்யூ வேட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

அதாவது ரென்ஷா பந்தை மீண்டும் தட்டி விட்ட போது இரு கால்களும் காற்றில் எழும்ப பந்தை பீல்டுக்குள் காற்றில் தூக்கி விட்டார், அதைத்தான் பான் ட்டன் கேட்ச் ஆக்கினார். எல்லைக் கோட்டைக் கடந்த நிலையில் அவர் இரு கால்களையும் தூக்கி பந்தை மைதானத்திற்குள் தட்டி விட்டு கேட்சுக்கு அனுப்பியதால் அது பிரில்லியண்ட் என்று வர்ணிக்கப்பட்டது, ஆனால் விதிகளின் படி எல்லைக்கோட்டைக் கடந்த ஒரு வீரர் பந்தை தட்டி விட்டால் அது சிக்சர்தானே என்ற சர்ச்சை எழுந்தது.

ஆனால் விதிமுறை என்ன கூறுகிறது எனில் பீல்டர் பவுண்டரி கோட்டைக் கடந்திருந்தாலும் பந்தை அவர் தொடும்போது அவரது உடலின் எந்த ஒரு பாகமும் தரையில் உள்ள எந்த ஒரு பொருளுடனும் தொடர்பில் இல்லாமல் இருந்தால் அது கேட்ச் தான் என்று கூறுகிறது. மேலும் பிரமாதமான கேட்ச் என்று அது வர்ணிக்கப்பட்டது நடுவர்கள் நீண்ட நேரம் வீடியோ ரிவியூவுக்குப் பிறகு வேட் அவுட் என்று தீர்ப்பளித்தனர்.

வேட் இது குறித்து கூறும்போது, “எனக்கு விதி என்னவென்று தெரியவில்லை, ஒருமுறை பீல்டர் ஒருவர் எல்லைக் கோட்டைக் கடந்த நிலையில் அங்கிருந்தே பந்துடன் எந்தவகையிலாவது தொடர்பு கொண்டால் அது சிக்சர்தானா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் நடுவர்கள் அவர் இரண்டாம் முறை பந்தை பீல்டுக்குள் தட்டி விட்ட போது அவரது கால்கள் காற்றில்தான் இருந்தன தரையில் இல்லை ஆகவே அவுட் என்றனர், நான் பெவிலியன் திரும்பினேன்” என்றார்.

ஹோபார்ட் அணி 126/9 என்று முடிய ஹீட் அணியினர் 10 பந்துகள் மீதமிருக்க வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x