தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பார் : ரவி சாஸ்திரி 

தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பார் : ரவி சாஸ்திரி 
Updated on
1 min read

பணமழை டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பார் என்று தெரியவந்துள்ளது.

ஆம், இந்திய அணியின் பயிற்சியாளர் கூறும்போது, “விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெறுவார்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ரவிசாஸ்திரி கூறும்போது, “நானும் தோனியும் கலந்தாலோசித்தோம், இது எங்களுக்கு இடையிலானது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை முடித்து விட்டார், விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிப்பார். எப்படிப் பார்த்தாலும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து விடுவார்.

இந்த வயதில் அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார். அப்படியென்றால் அவர் விரைவில் ஆடத்தொடங்க வேண்டும். அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடி உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அவதானிப்பார்.

எனவே டி20 கிரிக்கெட்தான் இனி அவருக்கு மீதமிருக்கிறது, நிச்சயம் ஐபிஎல் ஆடுவார். எனக்குத் தெரிந்த வரையில் தோனி இந்திய அணியில் தன்னை வலுக்கட்டாயமாக நுழைத்துக் கொள்ள விரும்புபவர் அல்ல, ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் அவருக்குப் பிரமாதமாக அமைந்து விடும்பட்சத்தில் பார்ப்போம்...” என்றார் ரவிசாஸ்திரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in