இன்னும் ஒருவிக்கெட்தான்:சாதிக்கப் போவது யார்? பும்ராவா, சாஹலா?

இன்னும் ஒருவிக்கெட்தான்:சாதிக்கப் போவது யார்? பும்ராவா, சாஹலா?
Updated on
1 min read

புனேயில் நாளை நடக்கும் இலங்கை அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை டி20 போட்டிகளில் அதிகபட்சமான விக்கெட்டுகளை இந்தியப் பந்துவீச்சாளர்களில் அஸ்வின், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா மூவரும் சமநிலையில் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் தலா 52 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

ஆனால் நாளைய போட்டியில் பும்ராவும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் டி20 போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியஇந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெறுவார்.

இதில் ரவிச்சந்திர அஸ்வின் 46 போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும், சாஹல் 36 போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் பும்ரா 44 போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

காயத்தில் இருந்து உடல்நலம் தேறி அணிக்குத் திரும்பிய பும்ரா மீது கடந்த 2-வது டி20 போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்தூரில் நடந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் மட்டுமே பும்ரா வீழ்த்தினார். நீண்ட நாட்களுக்குப்பின் பந்துவீசியதால், பந்துவீச்சிலும் துல்லியத் தன்மையும், பவுன்ஸரும் சிறிது தவறியது. ஆனால், நாளை நடக்கும் புனேவில் இழந்த ஃபார்மை பும்ரா மீட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாளை ஆட்டத்தில் யஜூவேந்திர சாஹல் களமிறங்காமல் இருக்க வேண்டும். ஒருவேளை சாஹலும், பும்ராவும் களமிறங்கி பும்ரா விக்கெட் வீழத்தாமல் சாஹல் அதிகமான விக்கெட் வீழ்த்தினால் பும்ராவைக் காட்டிலும் சாஹல் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெறுவார்.

நாளை இருவருமே ஒருவேளை போட்டியில் களமிறங்கினால், சாஹலைக்காட்டிலும் அதிக விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்துவது அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in