

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பஹ்ரைனைச் சேர்ந்த அல்ஸைன் டாரெக் பங்கேற்கிறார். அவருக்கு 10 வயதுதான் ஆகிறது என்பதுதான் ஆச்சரியம். தொழில்முறை வீரர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் மிக இளம் வயது வீராங்கனை என்ற பெயரை இதன் மூலம் அவர் பெறுகிறார்.
1.30 மீட்டர் உயரமே உள்ள அல்ஸைன்தான், தற்போது பஹ்ரைனிலேயே மிக வேகமான நீச்சல் வீராங்கனை. 50 மீட்டர் ஃபிரீஸ்டைல் பிரிவில் சாதிக்கக் காத்திருக்கும் அல்ஸைனின் ரோல் மாடல் நீச்சல் வீராங்கனைகள் கேட் கேம்பல் மற்றும் சாரா ஜோஸ்டோர்ம் ஆகியோர்தான்.
கஸனில் நடைபெற்ற 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வென்றதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்குகிறார்.
நீச்சல் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க வயது வரம்பு ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.