

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வெர்னன் பிலாண்டர் பேட்டிங் செய்த போது அவரை நோக்கி இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், முதல் ஸ்லிப்பில் இருந்த பென் ஸ்டோக்ஸ் இருவரும் சற்றே கோபத்துடன் வசை போன்ற மொழியைப் பயன்படுத்தியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
பென்ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லரின் இந்த வசை விவகாரம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பட்லர், பென் ஸ்டோக்ஸ் மீது ஐசிசி தன் பார்வையைத் திருப்பலாம் என்று தெரிகிறது.
பரபரப்பான 2வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா இன்னும் 8 ஓவர்கள் நின்றிருந்தால் ஆட்டம் ட்ரா ஆகியிருக்கும். அதனை சாதிக்க வெர்னன் பிலாண்டர் களத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மிட் ஆஃபிலிருந்து த்ரோ ஒன்று விக்கெட் கீப்பர் பட்லருக்கு வர பிலாண்டர் கடைசி நேரத்தில் தன் உடலை பந்தின் வழியிலிருந்து விலக்கிக் கொண்டார்.
இதனையடுத்து ஜோஸ் பட்லர் கெட்ட வார்த்தையுடன், ‘வழியிலிருந்து விலகித் தொலை’ என்பது போல் கூறினார்.
உடனே வெர்னன் பிலாண்டர், ஜோஸ் பட்லரைப் பார்த்தார், அதற்கு முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் , பிலாண்டரை நோக்கி, “ஏன் முறைக்கிறாய் அவர் சரியாகத்தானே சொன்னார்” என்று கூறினார்.
வீடியோ: