

திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், காரைக்கால் ஓஎன்ஜிசி ஆகியவை இணைந்து நடத்திய 48-வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் நடைபெற்றது.
இதில் 9 சுற்றுகளின் முடிவில் சென்னையைச் சேர்ந்த ஜெ.சரண்யா, பி.பாலகண் ணம்மா ஆகியோர் தலா 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்தனர். எனினும் முன்னேற்ற புள்ளிகள் அடிப்படையில் ஜெ.சரண்யா சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இந்த தொடரில் சரண்யா பட்டம் பெறுவது 5-வது முறையாகும்.