Published : 28 Dec 2019 05:27 PM
Last Updated : 28 Dec 2019 05:27 PM

கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த கேப்டன்?- ஐசிசியின் கேள்விக்கு பதிலளித்த கிரிக்கெட் ரசிகர்கள்

கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த கேப்டன் என்ற ஐசிசியின் கேள்விக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் பெயரை தெரிவித்துள்ளனர்.

ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கேப்டன் யார்? என்று கேள்வி கேட்டு பதிவிட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கேன் வில்லியம்சன், தோனி, கோலி, ரோஹித் சர்மா என பெயர்களை பதிவிட்டனர்.

எனினும் பெரும்பான்மையான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தோனியின் பெயரையே கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த கேப்டனாக பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அப்பதிவில் ரசிகர்கள் ஆதரவுடன் தோனியே வெற்றி பெற்றிருந்தார். தோனி இதுவரை இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டி, 90 டெஸ்ட், 98 டி 20 ஆட்டங்களில் விளையாடி 17,266 ரன்கள் குவித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 839 வீரர்களை வெளியேற்றியுள்ளார்.

கேப்டனாக இந்திய அணிக்கு 2007-ல் டி 20 உலகக் கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார். மேலும் டெஸ்டில் இந்திய அணியை நம்பர் ஒன் இடத்துக்கும் கொண்டு சென்றார். இதுதவிர ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறையும், சாம்பியன்ஸ் லீக்கில் 2 முறையும் கோப்பை வென்று கொடுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x