Last Updated : 26 Dec, 2019 12:16 PM

 

Published : 26 Dec 2019 12:16 PM
Last Updated : 26 Dec 2019 12:16 PM

ஐசிசி தரவரிசை ஒரு முழுக் குப்பை  - மைக்கேல் வான் கடும் தாக்கு 

ஐசிசி தரவரிசை மதிப்பீடுகள் ஒரு முழுக் குப்பை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்தியா தற்போது ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளன.

நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் 2 மற்றும் 4ம் இடத்தில் இருக்க தகுதியானதல்ல, ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளில் போதிய டெஸ்ட் வெற்றிகளை இந்த அணிகள் ஈட்டவில்லை என்கிறார் மைக்கேல் வான்.

“நான் ஐசிசி தரவரிசை குறித்து கடுமையான நேர்மையில் கருத்துக் கூறுகிறேன். அது முழுக்க முழுக்க குப்பை. நியூஸிலாந்து என்ன கடந்த 2 ஆண்டுகலில் ஏகப்பட்ட தொடர்களை வென்று விட்டனரா என்ன.. இரண்டாம் இடத்தில் இருக்க, அல்லது இங்கிலாந்து கடந்த 3-4 ஆண்டுகளாக டெஸ்ட் தொடர்களில் கடுமையாக திணறி வருகிறது, குறிப்பாக அயல்நாடுகளில், இங்கிலாந்து எப்படி 4ம் நிலையில் இருக்கலாம்.

இங்கிலாந்து உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் வென்றுள்ளது. அதுவும் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை தங்கள் மண்ணிலேயெ ட்ரா செய்யவே முடிந்துள்ளது. எனவே இந்த ரேங்கிங் குழப்பமாக உள்ளது, அதே போல் நியூஸிலாந்து 2வது சிறந்த டெஸ்ட் அணியாக எப்படி இடம்பெற முடியும்.. ஆஸ்திரேலியாதான் நிச்சயம் சிறந்த அணியாக இருக்க முடியும்.

இப்போதைக்கு இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகள்தான் உலகின் சிறந்த டெஸ்ட் அணிகள். இதில் கேள்வியே இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு வந்து அந்த அணியை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய அணி- 12 மாதங்களுக்கு முன்பாக- எது என்றால் இந்தியாதான். தொடரை ஆஸி.யில் வென்றனர்.

ஆனால் அப்போது ஸ்மித், வார்னர், லபுஷேன் ஆகியோர் இல்லை. அடுத்த முறை இந்தியா இங்கு வரும்போது அனைவரும் உடற்தகுதியுடன் இருப்பார்கள் என நினைக்கிறேன், இந்திய அணியில் நல்ல வேகப்பந்து வீச்சு, போதிய ஸ்பின், பேட்டிங் வரிசையில் அனுபவம் உள்ளது. எனவே ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு சரிசமமாக ஆடக்கூடிய அணி இந்திய அணிதான்” இவ்வாறு கூறினார் மைக்கேல் வான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x