

பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டோம் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைமைச் செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி கூறும்போது, “பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் நாங்கள் விளையாட முடியாது.
பாகிஸ்தானில் டி20 போட்டிகளை நடத்தினால் மட்டுமே விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக டெஸ்ட் தொடர்களில் அங்கு விளையாட முடியாது.
பாகிஸ்தான் நடத்தும் தொடர்களில் அந்த அணி உள்நாட்டு மைதானங்களில் மட்டுமே விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் எஹ்சான் மானி தெரிவித்துள்ளார். அது அவர்களது விருப்பம். ஆனால் எங்களால் அங்கு டி20 தொடர்களில் மட்டுமே விளையாட முடியும்.
டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை உள்ளது. அப்படி டெஸ்ட் தொடர் நடத்த வேண்டும் என்றால் வேறு நாடுகளில் போட்டியை நடத்தலாம்” என்றார்.