1,038 பவுண்டரி, 117 கேட்சுகள் பிடித்த வீரர்: 564 விக்கெட்டுகள்: கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்?

விராட் கோலி: கோப்புப்படம்
விராட் கோலி: கோப்புப்படம்
Updated on
3 min read

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் குறித்த ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் இந்திய வீரர்களே கோலோச்சுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள், சிறந்த கேப்டன், அதிகமான விக்கெட்டுகள் என அனைத்திலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 2010 முதல் 2019-ம் ஆண்டுவரை சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலியும், அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக தமிழகத்தின் ரவிச்சந்திரஅஸ்வினும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விராட்கோலி தனது ஓய்வு காலத்துக்குப்பின்பும் 2010-2019ம்ஆண்டு அவரின் நினைவுகளில் நிச்சயம் தவழக்கூடும். கடந்த 2010-ம் ஆண்டு கிரிக்கெட்உலகில் அறிமுகமாக கேப்டனாக உயர்ந்த கோலி, இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரையிலும், உலகக்கோப்பை அரையிறுதி வரையிலும் அழைத்துச்சென்று தன்னை வெற்றிகரமானகேப்டனாகவே நிரூபித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் தனது பேட்டிங் திறமையால் விராட்கோலி கடந்த 10 ஆண்டுகளில் தனி முத்திரை பதித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 11 ஆயிரத்து 125 ரன்கள் சேர்த்து மலைக்க வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் அதிகமான சதங்கள் அடித்தவராகக் கோலி 42 சதங்களுடன் உள்ளார்.

வீரர்

போட்டி

ரன்கள்

சராசரி

100

50

கோலி

227

11,125

60.79

43

52

ரோஹித்

180

8,249

53.56

28

39

அம்லா

159

7,265

49.76

26

33

டிவில்லியர்ஸ்

135

6,485

64.20

21

33

ராஸ் டெய்லர்

155

6,428

54.01

17

39

விராட் கோலியைக்காட்டிலும் 3 ஆயிரம் ரன்கள் குறைவாக ரோஹித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார்.

43 சதங்கள், 52 அரைசதங்கள் அடித்துள்ள விராட்கோலி 35 முறை ஆட்டநாயகன் விருதுகள், 7 முறை தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் விராட்கோலி 4 ஆயிரத்து 152 ரன்கள் பவுண்டரி மூலம் கிடைத்துள்ளன, அதாவது ஆயிரத்து 38 பவுண்டரிகளை கோலி அடித்துள்ளார். பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ள கோலி 117 கேட்சுகளையும் ஒருநாள் போட்டியில் பிடித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் சென்று 5 ஆயிரத்து 775 ரன்கள் சேர்த்துள்ளார். இதை இதுவரை எந்தவீரர்களும் சேர்க்கவில்லை. அதேபோல் 22-க்கும் அதிகமான சதங்களைகோலி அடித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் விராட் கோலி சேர்த்ததுள்ளார். 2016ம்ஆண்டில் 2 ஆயிரத்து 595 ரன்கள், 2017-ம் ஆண்டில் 2ஆயிரத்து 818 ரன்கள், 2018ம் ஆண்டில் 2 ஆயிரத்து 715 ரன்கள், 2019-ம் ஆண்டில் 2,455 ரன்கள் சேர்த்துள்ளார்

விராட் கோலி ஒருவகையான சாதனையாளர் என்றால், அவருக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு ரோஹித் சர்மாவும் சாதனையாளர் என்பதை மறுப்பதிற்கில்லை

ஒருநாள் போட்டிகளில் 2 முறைக்கு அதிகமாக இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டும்தான். கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை இரட்டைசதம் அடித்துள்ள ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா(209), இலங்கை(264)(208) ஆகிய அணிகளு்க்கு எதிராக இரட்டை சதம் அடித்துள்ளார்.

வீரர்

இன்னிங்ஸ்

சிக்ஸர்

ரோஹித்

176

233

மோர்கன்

179

183

கெயில்

94

180

டிவில்லியர்ஸ்

129

155

கப்தில்

155

153

சிக்ஸர் அடித்த வகையில் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாதான் முதலிடத்தில் உள்ளார்.. ரோஹித் சர்மா 233 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 183 சிக்ஸர்களும், கெயில் 180 சிக்ஸர்களும், டிவில்லியர்ஸ் 155 சிக்ஸர்களும், கப்தில் 153 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த பந்துவீச்சாளர், அதிகமான விக்கெட் வீழ்த்தியவர் என்று ஐசிசி வெளியிட்ட பட்டியலில் இந்திய அணியின் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்து அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் குறித்த பட்டியலைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டிருந்தது. அதில் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திர அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். ஐசிசி வெளியிட்ட பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார், அதிலும் சுழற்பந்துவீச்சாளர் இவர் ஒருவர் மட்டுமே.

2-வது இடத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் 535 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 525 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்திலும் உள்ளனர். 4-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் டிம் சவுதி472 விக்கெட்டுகளையும், டிரன்ட் போலட் 458 விக்கெட்டுகளை வீழ்த்தி 5-வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அஸ்வின் தன்னை மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வந்தார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அவரின் திறமை ஒளிர்ந்தது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50-வது விக்கெட், 100-வது விக்கெட், 150 விக்கெட், 200 வது விக்கெட், 250-வது விக்கெட், 300 விக்கெட் மற்றும் 350 விக்கெட்டுகளை மிக விரைவாக எட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in