

நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்காக இந்திய அணி அங்கு செல்வதையடுத்து இந்தியா ஏ அணி முன்னதாகச் செல்கிறது, இந்த இந்தியா ஏ அணியில் ஹர்திக் பாண்டியா, பிரிதிவி ஷா ஆகியோர் நியூஸிலாந்து செல்கின்றனர்.
இந்தப் பயணத்தின் ஒருநாள் தொடருக்காக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரிதிவ் ஷா, ஒருநாள் மற்றும் 4 நாள் தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார். ஷுப்மன் கில்லும் இந்த அணியுடன் செல்கிறார்.
இந்தியா ஏ அணியின் ஒருநாள் போட்டிகளுக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 4 நாள் போட்டிகளுக்கு ஹனுமா விஹாரி கேப்டனாக இருப்பார்.
வெலிங்டனில் பிப்ரவரி 21ம் தேதி முதல் டெஸ்ட்டில் இந்திய அணி மோதுவதை அடுத்து, இந்தியா ஏ அணியின் 2வது 4 நாள் போட்டியில் புஜாரா, அகர்வால், சஹா, அஸ்வின ஆகிய டெஸ்ட் வீரர்களும் பங்கேற்கின்றனர்.
3 ஒரு தினப்போட்டிகளுக்கான இந்தியா ஏ அணி வருமாறு:
பிரிதிவி ஷா, மயங்க் அகர்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில் (கேப்டன்), சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, அக்சர் படேல், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், இஷான் போரெல், கலீல் அகமெட், முகமது சிராஜ்.
முதல் 4 நாள் ஆட்டத்துக்கான இந்தியா ஏ அணி:
பிரிதிவி ஷா, மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சல், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி (கேப்டன்), கே.எஸ்.பரத் (வி.கீ), ஷிவம் துபே, ஷாபாஸ் நதீம், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், ஆவேஷ் கான், சிராஜ், போரெல், இஷான் கிஷன்.