நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடினாலும் கூட வெற்றி பெறாமல் போகலாம்: மே.இ. பயிற்சியாளர் சூசகம்

நாங்கள் எங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடினாலும் கூட வெற்றி பெறாமல் போகலாம்: மே.இ. பயிற்சியாளர் சூசகம்
Updated on
1 min read

ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், சென்னையில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தாலும் 2வது போட்டியில் வெற்றி பெற போராடிய போதும் தங்கள் அணி ‘அண்டர் டாக்ஸ்’ என்றே மே.இ.தீவுகள்பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறுகிறார்.

“இந்தப் பிட்சில் 300 அல்லது 320 ரன்கள் வெற்றி இலக்கு என்கின்றனர். இந்தக் காலக்கட்டத்தில் இத்தகைய ரன் எண்ணிக்கையை நோக்கித்தான் குறி வைக்க வேண்டும் அதுவும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக, முதலில் பேட் செய்தாலும் 320 ரன்களை எடுக்க வேண்டும்.

நாளை கட்டாக்கில் சிறப்பாக ஆட வேண்டுமென்பதை அணி விரும்புகிறது என்பதை வீரர்கள் அறிந்திருக்கின்றனர். மேலும் நாங்கள் சிறப்பாக ஆடினாலும் கூட நாங்கள் வெற்றி பெறாமல் போகலாம். நாங்கள் அணியைக் கட்டமைத்து வருகிறோம், அந்தப் பாதையில் நாளைய போட்டியின் முடிவு தாக்கம் செலுத்தாது. எனவே எங்கள் கட்டமைப்பு திசையை நோக்கி தொடர்ந்து நாங்கள் பயணிப்போம்.

விராட் கோலி எங்கள் வீரர்களை ’செண்ட் ஆஃப்’ செய்யலாம், பெரிய சைகைகளைச் செய்யலாம். ஆனால் நாங்கள் ஒரே விடுதியில்தான் தங்கியுள்ளோம். ஹோட்டலில் எந்த ஒரு ‘பஞ்ச்-அப்’களும் இல்லை. இரு அணியினரும் சீன உணவு விடுதியில்தான் சேர்ந்து உணவு அருந்துகிறோம். எங்களில் சிலர். இரு அணிகளுக்கும் இடையே நட்புறவு பலமாகவே உள்ளது.

(ஷெல்டன் காட்ரெல் கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் ஐபிஎல் ஏலத்தில் ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறித்து), “மில்லியன் டாலர்கள் கிரிக்கெட் ஆட வருமானம் கிடைக்கிறது என்றால் அது வாழ்க்கையை மாற்றக்கூடியதுதான். ஆனால் அவரது கரியரை மாற்றும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அவர் அறிந்துள்ளார். அதாவது வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் என்ற இடத்தைக் கூறுகிறேன்” என்றார் ஃபில் சிம்மன்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in