மிகவும் பிடித்த தற்போதைய வேகப்பந்து வீச்சாளர் யார்?- டேல் ஸ்டெய்ன் பதில் 

மிகவும் பிடித்த தற்போதைய வேகப்பந்து வீச்சாளர் யார்?- டேல் ஸ்டெய்ன் பதில் 
Updated on
1 min read

ஆர்சிபி அணியினால் மீண்டும் அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கே ஏலம் எடுக்கப்பட்ட டேல் ஸ்டெய்ன் 2010-ல் சச்சின் டெண்டுல்கருக்கு வீசிய அனுபவம் வலுவான நினைவு என்று கூறியுள்ளார்.

தன் ட்விட்டர் தளத்தில் அவர் மேற்கொண்ட கேள்வி பதில் அமர்வில் ஒரு பயனாளர் இப்போது வேகப்பந்து வீச்சில் வலுவான அணி எது என்று கேட்க ‘இந்தியா’ என்றார்.

அதே போல் அவருடைய சிறந்த பந்து வீச்சு பற்றி ஒரு பயனாளர் கேட்க 2010-ல் நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக எடுத்த 7/51 சிறந்த பந்து வீச்சு என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பு பற்றிய கேள்விக்கு, “பெரிய வாய்ப்பு.. நியூஸிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து திருப்திகரமாக ஆடவில்லை, இப்படிக்கூறும்போது அந்த அணி நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தமாகாது. பவுச்சர் தலைமையில் அணியின் அனைத்துப் பகுதிகளையும் நிறைவு செய்துள்ளோம், சுவாரசியமான தொடராக இருக்கும் என்றார்.

இன்றைய கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பாட் கமின்ஸ் என்றார் டேல் ஸ்டெய்ன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in