Published : 19 Dec 2019 08:38 PM
Last Updated : 19 Dec 2019 08:38 PM

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்

கே.எல்.ராகுல் : கோப்புப்படம்

புதுடெல்லி

2020-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலை அந்த அணியின் நிர்வாகம் நியமி்த்துள்ளது.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஆர்.அஸ்வின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டதால், அடுத்ததாக யார் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இப்போது கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கிங்ஸ்லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா கூறுகையில், " 13-வது ஐபிஎல் சீசனில் கே.எல்.ராகுலை கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட ராகுல், அடுத்த சீசனில் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறோம். பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ராகுல் சிறப்பாக செயல்படுவர். அணி நிர்வாகிகள் ஒருமனதாக ராகுலைத் தேர்வு செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்

2018-ம் ஆண்டு் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ராகுலை விலைக்கு வாங்கியது. ஆஸ்திரேலியத் தொடரில் மோசமாக செயல்பட்டதையடுத்து ராகுல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதில் ராகுல் ஆர்வம் காட்டினார். விஜய் ஹசாரே, சயித் முஷ்தாக் அலி போட்டித் தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து. மே.இ.தீவுகள் தொடருக்கு ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

டி20தொடரிலும், ஒருநாள் தொடரிலும் ராகுல் சிறப்பாகப் பேட் செய்து வருகிறார். விசாகப்பட்டிணத்தில் நேற்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் சதம் அடித்த ராகுல் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ்லெவன் அணி மேக்ஸ்வெல்(ரூ.10.5 கோடி), ஷெல்டன் காட்ரெல்(ரூ.8.50 கோடி) கிறிஸ் ஜோர்டன்( ரூ.3 கோடி), 15-வயது ஆப்கானிஸ்தான் வீரர் ரவி பிஸ்னோய்(ரூ.3 கோடி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x