Published : 19 Dec 2019 03:01 PM
Last Updated : 19 Dec 2019 03:01 PM

ஐபிஎல் ஏலம் 2020: நிகழ் பதிவுகளுடன் முழு விவரம்

ஐபிஎல் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

பாட் கமின்ஸ் - ரூ.15.5 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 10.75 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிறிஸ் மோரிஸ் - ரூ.10 கோடி - ஆர்சிபி

ஷெல்டன் காட்ரெல் - ரூ.8.5 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

நேதன் கூல்டர் நைல் - ரூ. 8.5 கோடி - மும்பை இந்தியன்ஸ்

ஷிம்ரன் ஹெட்மையர் - ரூ.7.75 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்

-----------------------------

இத்துடன் நிகழ் பதிவு நிறைவுறுகிறது!

வினய் குமார் கடைசி வீரர் - விற்கவில்லை - ஐபிஎல் ஏலம் 2020 முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து வீரர் டாம் கரண் - ரூ. 1 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

இலங்கை வீரர் இசுரு உதனா - ரூ.50 லட்சம்- ஆர்சிபி

நிகில் நாயக் - ரூ.20 லட்சம் - கொல்கத்தா

ஷாபாஸ் அகமெட் - ரூ.20 லட்சம் - ஆர்சிபி

லலித் யாதவ் - ரூ.20 லட்சம்- டெல்லி கேப்பிடல்ஸ்

ஆண்ட்ரூ டை - ரூ.2 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

விரைவுச் சுற்று ஏலம் தொடங்கியது

3ம் முறை டேல் ஸ்டெய்ன் - ஆர்சிபி அணி ஏலம்- ரூ.2 கோடி

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 2ம் முறையும் ஏலம் எடுக்கப்படவில்லை, இத்துடன் முதல்சுற்று விரைவுச் சுற்று முடிந்தது, 2வது விரைவுச் சுற்று இன்னும் 10 நிமிடங்களில் தொடங்கும்...

2-ம் முறை லக்கி பிரைஸ் அடித்த ஆஸி ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரூ.4.80 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் ஏலம் எடுத்தது

கொலின் மன்ரோ, பென் கட்டிங் 2ம் முறையும் அதிர்ஷ்டம் இல்லை

துஷார் தேஷ்பாண்டே- ரூ.20 லட்சம்- டெல்லி கேப்பிடல்ஸ்

இளம் தமிழ்நாடு வீரர் சாய் கிஷோருக்கு வாய்ப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது

எப்படியாவது இந்திய அணிக்குள் நுழைத்து விட வேண்டும் என்று எம்.எஸ்.கே.பிரசாத் முயன்ற ஆந்திரா, இந்தியா ஏ கீப்பர் கே.எஸ்.பரத் - விற்கவில்லை

தமிழக வீரர் ஷாரூக் கான் 2ம் முறையும் அதிர்ஷ்டம் இல்லை.

இரண்டாவது முறையும் தெ. ஆ.வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னுக்கு வாய்ப்பில்லை- விற்கவில்லை

2வது வாய்ப்பில் லக்கி பிரைஸ் அடித்த மோஹித் சர்மா - ரூ.50 லட்சத்திற்கு டெல்லி கேப்பிடல்ஸ் ஏலம் எடுத்தது

சஞ்சய் யாதவ் - ரூ.20 லட்சம்-சன்ரைசர்ஸ்

மே.இ.தீவுகளின் நோட்-புக் புகழ், விராட் கோலியை வீழ்த்தி சவால் விட்ட கேஸ்ரிக் வில்லியம்ஸ் விற்கப்படவில்லை

ஜம்மு காஷ்மீர் வீரர் அப்துல் சமத் - ரூ.20 லட்சம்- சன் ரைசர்ஸ்

தஜிந்தர் டில்லான் - ரூ.20 லட்சம்- கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இன்னொரு அதிர்ச்சி: ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் விற்கவில்லை

பிரவீண் தாம்பே - ரூ.20 லட்சம்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆர்யன் ஜுயல், சுமித் குமார் விற்கவில்லை

மே.இ.தீவுகளின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் - ரூ.50 லட்சம் அடிப்படை விலை- விற்கவில்லை

ஆஸி. வீரர் கேன் ரிச்சர்ட்ஸன் - ரூ.4 கோடி- ஆர்சிபி அணி ஏலம் எடுத்தது.

ஆஸி. வீரர் ஷான் அபாட், நியூஸி. வீரர் மேட் ஹென்றி - விற்கவில்லை

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் - ரூ. 3 கோடி - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அதிர்ச்சி: மே.இ. கேப்டன் ஜேசன் ஹோல்டர் - அடிப்படை விலை ரூ.75 லட்சம் விற்கவில்லை

சாம் கரன் சகோதரர் டாம் கரன் விற்கவில்லை

இங்கிலாந்து டி20, டி20 அதிரடி வீரர் டாம் பேண்டன் - கேகேஆர்- ரூ.1 கோடி

உ.பி. வீரர் மோசின் கான் - ரூ.20 லட்சம்- மும்பை இண்டியன்ஸ்

ஜோஷ் பிலிப்ஸ் - ஆர்சிபி - ரூ.20 லட்சம்

மும்பை ஆல்ரவுண்டர் ஷாம்ஸ் முலானி விற்கவில்லை.

கர்நாடகா லெக்ஸ்பின்னர் பிரவீண் துபே - விற்கவில்லை.

ஹைதரபாத்தின் பி.சந்தீப் ரூ.20 லட்சம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலம் எடுத்தது

ஆயுஷ் பதோனி விற்கப்படவில்லை

இடைவேளைக்குப் பிறகு ஏலம் மீண்டும் தொடங்கியது..

இதுவரை 33 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர், மீதம் இருப்பது 40 வீரர்களுக்கான இடம் மட்டுமே. சிஎஸ்கே அணி தன் ஓவர்சீஸ் வீரர் கோட்டாவை முடித்து விட்டது.

ஜோஷ் ஹேசல்வுட் - ரூ.2 கோடி- சென்னை சூப்பர் கிங்ஸ்

முஸ்தபிசுர் ரஹ்மான், ஆடம் மில்னே - விற்கவில்லை

ஜேம்ஸ் நீஷம்- ரூ.50 லட்சம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அல்ஜாரி ஜோசப், மார்க் உட், பாரிந்தர் ஸரண் - விற்கவில்லை

ஆண்டில் பெலுக்வயோ, கொலின் மன்ரோ -விற்கவில்லை

மிட்செல் மார்ஷ் ரூ.2 கோடி - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

அதிர்ச்சி: மார்கஸ் ஸ்டாய்னிஸ் விற்கவில்லை

கொலின் இங்ரம், மார்டின் கப்தில், கார்லோஸ் பிராத்வெய்ட் விற்கவில்லை

நேற்றுதான் பேட்டி கொடுத்தா 44 வயது வரை ஆடுவேன் என்று மனோஜ் திவாரி விற்கவில்லை

சவுரவ் திவாரி - ரூ.50 லட்சம்- மும்பை இந்தியன்ஸ்

டேவிட் மில்லர் - ரூ.75 லட்சம்- ராஜஸ்தான் ராயல்ஸ்

அதிர்ச்சி: அதிரடி மே.இ.தீவுகள் வீரர் எவின் லூயிஸ் - விற்கவில்லை

ஷிம்ரன் ஹெட்மையர் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ.7.75 கோடிக்கு விற்பனை

ஆர்.சாய்கிஷோர், நூர் அகமது விற்கப்படவில்லை

14 வயது ஆப்கான் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய்- ரூ.2 கோடி- கிங்ஸ் லெவன் பஞ்சாப்

எம்.சித்தார்த் - ரூ.20 லட்சம்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கே.சி.கரியப்பா விற்கப்படவில்லை, மிதுன் சுதேசன் விற்கப்படவில்லை.

ஹோபார்ட் ஹரிகேன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ரைலி மெரிடித் ரூ.40 லட்சம் விற்கவில்லை

இஷான் போரெல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ரூ.20 லட்சம்

இந்திய யு-19 கார்த்திக் தியாகி அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆனால் ரூ.1.30 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது

குல்வந்த் கேஜ்ரோலியா, துஷார் தேஷ்பாண்டே- விற்கவில்லை

இந்திய யு-19 இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் அடிப்படை விலை ரூ20 லட்சம். அந்த விலைக்கே ராஜஸ்தான் எடுத்தது

அங்குஷ் பெய்ன்ஸ், விஷ்ணு வினோத்- விற்கவில்லை

கேதார் தேவ்தார், கே.எஸ்.பரத், பிரப்சிம்ரன் சிங் - விற்கவில்லை

அனுஜ் ராவத் - ரூ.80 லட்சம்- ராஜஸ்தான் ராயல்ஸ்

தமிழ்நாடு பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷாரூக்கான் அடிப்படை விலை ரூ.20 லட்சம்: யாரும் ஏலம் எடுக்கவில்லை

டேனியல் சாம்ஸ், பவன் தேஷ்பாண்டே விற்கப்படவில்லை

தெருவில் பானிபூரி விற்று டெண்ட்டில் தங்கி ஆடும் அண்டர் 19 வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூ.2.40 கோடிக்கு ராஜஸ்தானால் ஏலம் எடுக்கப்பட்டார்.

வருண் சக்ரவர்த்தி - ரூ.4 கோடி - கொல்கத்தா

தீபக் ஹுடா - ரூ.50 லட்சம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பிரியம் கார்க் - ரூ.1.90 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

விராட் சிங் - ரூ.1.90 கோடி- சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ராகுல் திரிபாதி - கொல்கத்தா - ரூ.60 லட்சம்

மனோஜ் கல்ரா, ரோஹன் காதம், ஹர்பிரீத் பாட்டியா - விற்கப்படவில்லை

ஆப்கான் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் ஜாகிர் கான் அடிப்படை விலை ரூ.50 லட்சம் விற்கப்படவில்லை

இஷ் சோதி, ஹெய்டன் வால்ஷ், ஆடம் ஸாம்ப்பா விற்கப்படவில்லை

பியூஷ் சாவ்லாவிற்கு ரூ.6.75 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது.. சாவ்லாவுக்கு அடித்த லக்கி பிரைஸ்

பெரிய தொகையில் ஏலம் சல்யூட் புகழ் மே.இ.தீவுகள் ஷெல்டன் காட்ரெல் ரூ.8,50 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஏலம் எடுத்தது

அடுத்த அதிர்ச்சி: நியூஸி. அணி வீரர் டிம் சவுதி விற்கப்படவில்லை

பெரிய விலை: ஆஸி. வீரர் நேதன் கூல்ட்டர் நைல்- ரூ. 8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது

ஆண்ட்ரூ டை -அடிப்படை விலை ரூ.1 கோடி: இப்போதைக்கு யாரும் ஏலம் எடுக்கவில்லை.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட் ரூ.3 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்குச் செல்கிறார்.

மிகப்பெரிய அதிர்ச்சி: டேல் ஸ்டெய்ன் ரூ.2 கோடி அடிப்படை விலை: ஏலம் எடுக்கப்படவில்லை

சிஎஸ்கேவுக்கு ஆடிய மோஹித் சர்மா - ஏலம் எடுக்கப்படவில்லை

மே.இ.தீவுகள் வி.கீ. பேட்ஸ்மென் ஷேய் ஹோப் ஏலம் எடுக்கப்படவில்லை

இலங்கையின் குசல் பெரேரா விற்கப்படவில்லை

வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், இந்திய விக்கெட் கீப்பர் நமன் ஓஜா - ஏலம் எடுக்கப்படவில்லை

தெ.ஆ. விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் ரூ.50 லட்சம் அடிப்படை விலை - யாரும் ஏலம் எடுக்கவில்லை

அலெக்ஸ் கேரி-யை ரூ.2.4 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலம் எடுத்தது

அடுத்த செஷன் தொடங்கவுள்ளது முதல் வீரர் ஆஸி. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி.

---

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் இன்னும் ரூ.31.95 கோடி ஏலத்தொகை உள்ளது

இடைவேளை... இந்த செஷனில் ரூ.10.75 கோடிக்கு மேக்ஸ்வெலை பஞ்சாப் அணி ஏலம் எடுக்க ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் அதிகபட்ச விலையான ரூ.15.5 கோடிக்கு கொல்கத்தவினால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ரூ.10 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலம் எடுத்துள்ளது.

ஸ்டூவர்ட் பின்னியின் அடிப்படை விலை ரூ.50 லட்சம்: ஏலம் எடுக்க ஆளில்லை.

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ரூ.10 கோடி விலைக்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து ஆல்ரவுண்ட்ர் சாம் கரன் ரூ.5.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது

ஆஸி ஆல்ரவுண்டர் பாட் கமின்ஸ் அதிகபட்ச விலையான ரூ.15.5 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.

ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஆஸி.யின் பாட் கமின்ஸ், அடிப்படை விலை ரூ.2 கோடி ஆர்சிபி அணி ஏலத்தொகையை ரூ.12.25 கோடிக்கு உயர்த்தியது.. மேக்ஸ்வெலை சில கோடிகளில் முந்தினார் பாட் கமின்ஸ், இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட் ஹோம் ஏலம் எடுக்கப்படவில்லை

இந்திய அதிரடி வீரர் யூசுப் பத்தான்: ஒருவரும் ஏலம் எடுக்கவில்லை.

கிறிஸ் வோக்ஸ் ரூ. 1.5 கோடி- டெல்லி கேப்பிடல்ஸ் எடுத்தது

கடைசியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.10.75 கோடிக்கு மேக்ஸ்வெலை ஏலம் எடுத்தது

அடுத்ததாக ஆஸி. ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்: அடிப்படை விலை ரூ.2 கோடி. டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரது விலையை ரூ.6 கோடிக்கு உயர்த்தியுள்ளது. கிங்ஸ் லெவன் ரூ.8.25 கோடிக்கு அதிகரித்தது. இப்போது இவர் விலை ரூ.10 கோடிக்கு அதிகரித்தது. பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கிடையே கடும்மோதல்

ஆஸ்திரேலிய வீரர் ஏரோன் பிஞ்சின் அடிப்படை விலை ரூ. 1கோடி ஆர்சிபி இவருக்கான விலையை ரூ.4 கோடிக்கு உயர்த்தியது. ஆர்சிபி அணியினால் ரூ.4.4 கோடிக்கு ஏரோன் பிஞ்ச் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா ரூ.50 லட்சம் அடிப்படை விலை : ஒருவரும் ஏலம் எடுக்கவில்லை

இங்கிலாந்தின் ஜேசன் ராய் ரூ.1.5 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது.

இந்திய டெஸ்ட் வீரர் ஹனுமா விஹாரி அவரது அடிப்படை விலை ரூ.50 லட்சம்: ஏலம் எடுக்கப்படவில்லை

ராபின் உத்தப்பா ரூ. 3 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ரூ.5.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் ஏலம் எடுக்கப்பட்டார்.

முதல் வீரர் கிறிஸ் லின் இவரது அடிப்படை விலை ரூ. 2 கோடி மும்பை இந்தியன்ஸ் அதே விலைக்கு வாங்கியது.

---

ஏலம் தொடங்குகிறது, பிரிஜேஷ் படேல் ஐபிஎல் அணி உரிமையாளர்களிடம் சிறு உரையாற்றுகிறார்.

ஏலத்தில் முதலில் பேட்ஸ்மென்கள் வருகின்றனர்: ஏரோன் பிஞ்ச், கிறிஸ் லின், மோர்கன், புஜாரா, ஜேசன் ராய், ராபின் உத்தப்பா, ஹனுமா விஹாரி

ஐபிஎல் 2020க்கான ஏலம் 3.30 மணிக்குத் தொடங்குகிறது. இதில் 73 இடங்களுக்கு 332 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளன. இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

அணிகளிடம் உள்ள தொகை விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ.14.60 கோடி)

மும்பை இந்தியன்ஸ் (ரூ.13.05 கோடி)

டெல்லி கேபிடல்ஸ் (ரூ.27.85 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ.35.65 கோடி)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ரூ.42.70கோடி)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ.27.90 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ.28.90 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(ரூ.17 கோடி)

எத்தனை வீரர்களை ஒரு அணி ஏலம் எடுக்க முடியும்?:

சென்னை சூப்பர் கிங்ஸ் -5 (3 இந்தியா, 2 வெளிநாடு)

டெல்லி கேப்பிடல்ச் - 11 (6 இந்தியா, 5 வெளிநாடு)

கிங்ஸ் லெவன் பஞ்சாப்- 9 (5 உள்நாடு, 4 வெளிநாடு)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 (7 உள்நாடு, 4 வெளிநாடு)

மும்பை இந்தியன்ஸ் -7 ( 5 உள்நாடு 2 வெளிநாடு)

ராஜஸ்தான் ராயல்ஸ் - 11 (7 உள்நாடு 4 வெளிநாடு)

ஆர்சிபி - 12 (6 உள்நாடு, 6 வெளிநாடு)

சன்ரைசர்ஸ் - 7 (5 உள்நாடு 2 வெளிநாடு)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x