Published : 18 Dec 2019 10:28 AM
Last Updated : 18 Dec 2019 10:28 AM

ரஞ்சி டிராபி: சஞ்சு சாம்சன் சதம், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்

இந்திய ஒருநாள் அணித்தேர்வுக்குழுவினரால் புறக்கணிக்கப்பட்டு வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மற்றொரு ரஞ்சி போட்டியில் சஞ்சு சாம்சன் பெங்கால் அணிக்கு எதிராக சதம் விளாசினார்.

தமிழக அணியில் நட்சத்திர வீரர்களான முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இல்லை. ஆனால் மற்றொரு நட்சத்திர வீரரான அஸ்வின் இருக்கிறார்.

இமாச்சலத்துக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின் 65 ரன்களுகு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இமாச்சல அணி 158 ரன்களுக்குச் சுருண்டது, ஆட்ட முடிவில் தமிழக அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.

தும்பாவில் நடைபெறும் கேரளா, பெங்கால் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் சஞ்சு சாம்சன் 182 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதம் விளாசினார். கேரளா அணி தன் முதல் இன்னிங்சில் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ராபின் உத்தப்பா 50 ரன்கள் எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x